சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜீவல்லரியின், தங்க சேமிப்பு திட்டமான டிஜி கோல்ட் மற்றும் சூப்பர் பிளக்ஸி 360 திட்டத்தை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ். ராஜரத்தினம் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர் யோகேஷ் ரத்னம்,லாக்ஷினி ரோஷன் மற்றும் இயக்குனர் ரோஷன். இடம் : போரூர் சென்னை.
விருதுநகரில் கேர்.ஏ.கே.பி.எஸ் மருத்துவமனை, சாரதா சக்தி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேல், நிகில் பரிசு வழங்கினர்.
மதுரை ரிசர்வ்லைன் – வண்டிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்துவதாலும், கடை விளம்பர போர்டுகள் வைப்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.