பைல் நேம் 2111 டிபிகே 001. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவ. 24-இல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதையடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றியாக இந்து அமைப்பினர் தேங்காய் உடைத்தனர்
நீலகிரி மாவட்டத் தலைநகரான ஊட்டியில் நிலவும் கடுமையான குளிர்(4.7 டிகிரி செல்சியஸ்) காரணமாக, அதிகாலையில் புல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உறைபனியின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவது இயற்கை எழிலையும், குளிரின் தீவிரத்தையும் காட்டுகிறது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜீவல்லரியின், தங்க சேமிப்பு திட்டமான டிஜி கோல்ட் மற்றும் சூப்பர் பிளக்ஸி 360 திட்டத்தை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ். ராஜரத்தினம் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர் யோகேஷ் ரத்னம்,லாக்ஷினி ரோஷன் மற்றும் இயக்குனர் ரோஷன். இடம் : போரூர் சென்னை.
விருதுநகரில் கேர்.ஏ.கே.பி.எஸ் மருத்துவமனை, சாரதா சக்தி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேல், நிகில் பரிசு வழங்கினர்.
மதுரை ரிசர்வ்லைன் – வண்டிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்துவதாலும், கடை விளம்பர போர்டுகள் வைப்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.