மதுரை ஓம் சாதனா சி.பி.எஸ்.இ., பள்ளயில் மாமதுரை சிரிப்பு சிந்தனை மன்றம் துவக்க விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்(இடமிருந்து 3வது) பங்கேற்றார். வலமிருந்து பள்ளி இயக்குநர் ரிதினி, துணைத் தாளாளர் கவின்ராஜ், தாளாளர் கண்ணன், முதல்வர்கள் சுபாஷினி, சசிகலா.
கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர்.
சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை ரோந்து வாகனங்கள், கண்காணிப்பு வாகனங்கள், காவல் கரங்களின் மீட்பு வாகனங்கள் ஆகியவற்றை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், நேற்று ஆய்வு செய்தார். உடன், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், துணை கமிஷனர் ஜெயங்கரன் ஆகியோர் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி துவங்கிய நிலையில், புதூர் பகுதியில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது...