தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

‘கட்டிங்’ கொடுத்தால் கல்லுாரி ரோட்டோரத்தையும் ஆக்கிரமிக்கலாம் போல. இடம்: மதுரை லேடிடோக் கல்லுாரி ரோடு.
21-Nov-2026

ShareTweetShareShare

2/

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசின் முக்கியமான அலுவலகங்கள் செயல்படும் சேனாபவன் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள தூசி மற்றும் மண்ணை அப்புறப்படுத்த உயர் அழுத்த தண்ணீர் தெளிப்பான் மூலம் டெல்லி மெட்ரோ கார்ப்பரேஷன் சார்பில் சுத்தம் செய்தனர்.
21-Nov-2026

3/

மதுரை ஓம் சாதனா சி.பி.எஸ்.இ., பள்ளயில் மாமதுரை சிரிப்பு சிந்தனை மன்றம் துவக்க விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்(இடமிருந்து 3வது) பங்கேற்றார். வலமிருந்து பள்ளி இயக்குநர் ரிதினி, துணைத் தாளாளர் கவின்ராஜ், தாளாளர் கண்ணன், முதல்வர்கள் சுபாஷினி, சசிகலா.
21-Nov-2026

4/

ஜல்லிக்கற்களை சிதற விட்டு வாகன ஓட்டிகளை வழுக்க விடுவதே அதிகாரிகளின் (அ)லட்சியமோ. இடம்: மதுரை மதிச்சியம் – பனகல் ரோடு.
21-Nov-2026

5/

மறையும் பொன் நிற சூரியனின் இடையில் மேகங்கள் போன்ற இந்த வெள்ளைக் கொக்குகள், மாலை பொழுதை மேலும் அழகு ஊட்டுகிறது. இடம்: கோவை, வாலாங்குளம்
21-Nov-2026

6/

திருப்பூர் மண்ணரை மூளிக்குளம் முழுவதும் ஆகாயதாமரை மற்றும் செடிகள் முளைத்துள்ளது.
21-Nov-2026

7/

கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர்.
21-Nov-2026

8/

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை ரோந்து வாகனங்கள், கண்காணிப்பு வாகனங்கள், காவல் கரங்களின் மீட்பு வாகனங்கள் ஆகியவற்றை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், நேற்று ஆய்வு செய்தார். உடன், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், துணை கமிஷனர் ஜெயங்கரன் ஆகியோர் இருந்தனர்.
21-Nov-2026

9/

சிவகங்கையில் சர்வோதய மண்டலம் சார்பில் மத நல்லிணக்கம், உலக அமைதியை வலியுறுத்தி காளையார் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
21-Nov-2026

10/

தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி துவங்கிய நிலையில், புதூர் பகுதியில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது...
21-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us