தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் பகுதியில் எதிரே வரும் வாாகனங்கள் தெரியாத அளவிற்கு நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இடம்; பாலக்கரை மணிமுக்தாறு பாலம்.
21-Nov-2026

ShareTweetShareShare

2/

பிகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜாபர்பட்டியில் நடைபெற்ற பேரணியில், திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் பிரதமர் மோடி. உடன் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி ஆகியோர்
21-Nov-2026

3/

சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பாலம் அமைப்பதற்கான தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
21-Nov-2026

4/

பகலில் செம்பரம்பாக்கம் ஏரி தெரியாத அளவிற்கு சூழ்ந்த பனி மூட்டம்.
21-Nov-2026

5/

திருமுடிவாக்கம் பகுதியில் பல்லாங்குழி ஆன சாலையில் தினந்தோறும் அவதிப்படும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்.
21-Nov-2026

6/

சாலையை மறைக்கும் அளவில் பகலிலேயே சூழ்ந்த பனிமூட்டம். இடம்: வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வரதராஜபுரம்.
21-Nov-2026

7/

நீர்நிலையா... ஆகாயத்தாமரைக் காடா? திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியில் உள்ள மூளிக்குளம் முழுவதும் ஆகாயத்தாமரையும் பல்வேறு செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து, நீர்நிலையே மறையும் அளவுக்கு ஆக்கிரமித்துள்ளன. ஒரு காலத்தில் நீர்த்தேக்கமாகவும், சுற்றுப்புற மக்களின் இயற்கை வளமாகவும் விளங்கிய குளம், தற்போது தாவரங்களின் ஆதிக்கத்தால் தனது இயல்பான தோற்றத்தை இழந்து வருகிறது. ஆகாயத்தாமரையை அகற்றி, குளத்தைத் தூர்வாரி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைத்து, நீர்நிலையை மீட்டெடுக்க நீர் வள ஆதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பசுமை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்பு. இயற்கை அளித்த நீர்வளத்தைப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறைக்கு நீர்நிலைகளை உயிர்ப்புடன் விட்டுச் செல்வது அனைவரின் கடமை.
21-Nov-2026

8/

தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
21-Nov-2026

9/

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன்’ என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவி ஒருவர், பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்காலக் காரின் அழகை ரசித்தார்.
21-Nov-2026

10/

திண்டுக்கல் காந்திமார்க்கெட் அருகே தாலுகா ஆபிஸ் ரோட்டில் ஆக்கிரமித்துள்ள வாகனங்கள்.
21-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us