இன்றைய போட்டோ


2/
3/

4/

5/
பிகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜாபர்பட்டியில் நடைபெற்ற பேரணியில், திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் பிரதமர் மோடி. உடன் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி ஆகியோர்
21-Nov-2026

6/

8/

9/

10/
நீர்நிலையா... ஆகாயத்தாமரைக் காடா? திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியில் உள்ள மூளிக்குளம் முழுவதும் ஆகாயத்தாமரையும் பல்வேறு செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து, நீர்நிலையே மறையும் அளவுக்கு ஆக்கிரமித்துள்ளன. ஒரு காலத்தில் நீர்த்தேக்கமாகவும், சுற்றுப்புற மக்களின் இயற்கை வளமாகவும் விளங்கிய குளம், தற்போது தாவரங்களின் ஆதிக்கத்தால் தனது இயல்பான தோற்றத்தை இழந்து வருகிறது. ஆகாயத்தாமரையை அகற்றி, குளத்தைத் தூர்வாரி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைத்து, நீர்நிலையை மீட்டெடுக்க நீர் வள ஆதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பசுமை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்பு. இயற்கை அளித்த நீர்வளத்தைப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறைக்கு நீர்நிலைகளை உயிர்ப்புடன் விட்டுச் செல்வது அனைவரின் கடமை.
21-Nov-2026


