புதுச்சேரி திருவள்ளூர் பஸ் நிலையம் எதிரில் நீண்ட காலமாக சென்டர் மீடியன் இல்லாததால் விபத்துகள் ஏற்பட்டது. தற்போது இதனை சரி செய்யும் விதமாக சென்டர் மீடியன் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் இன்று முதல் டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நமது பாரம்பரியம் நமது பெருமை என்ற தலைப்பில் கண்காட்சி துவங்கியது; ஆர்வத்துடன் மக்கள் பார்வையிட்டனர்.
வேலை நிறுத்தம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்துவிசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமர்ஸ் கனெக்ட்-26 வணிகவியல் திறன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் ஸ்டெல்லா தலைமையில் பரிசு வழங்கி கவரவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாள் காலை உற்சவத்தில், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.