கார்த்திகை மாவளி ரூ.100க்கு விற்பனை கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில், சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சுற்றி மகிழும் கார்த்திகை மாவளி ஒன்று, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
5 அகல் விளக்குகள் ரூ.10க்கு விற்பனை கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள நடைபாதை கடை ஒன்றில், 5 அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் பெயரில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாக தெரிவித்த ராஜகோபால் என்பவர் பேரவை தொடர்பான லோகோவையும் வெளியிட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,பால்ராஜ் இல்ல திருமண விழாவில் மதுரை காமராஜ் பல்கலை டீன் கண்ணதாசன் (வலமிருந்து3வது)- அனிதா (இடமிருந்து 3வது) தம்பதியின் மகன் ஹரிஆனந்தராஜ்- சங்கரி திருமணம் மதுரையில் நடந்தது. இடமிருந்து மணமகள் சகோதரர் கைலாஷ், பெற்றோர் ஸ்ரீகங்கை – கேதார்நாத், மணமகன் சகோதரர் அன்புசோலை ராஜ்.
மதுரை வடமலையான் மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் சிந்தனை, செயல்திறன் அறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைக்கு டாக்டர் பாப்புநாதன் (வலமிருந்து 3வது) பரிசு வழங்கினார். இடமிருந்து டாக்டர்கள் சுந்தர்ராஜன், அமுதா ராஜேஸ்வரி, மேலாளர் சைலஜா.