சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பாத்திரத்தால் தலையை மறைத்தவாறு இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாய்- மகன். இடம்: தாம்பரம்.
மதுரை ட்ரீம்ஸ் பவுண்டேஷன் அஸ்வின் மருத்துவமனை இணைந்து எஸ். பி. ஜே. மெட்ரிக் பள்ளியில் நடத்திய குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரவிந்த் ஐ கேர் நிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜனா பங்கேற்றனர். அருகில் டாக்டர்கள் ஆனந்தகுமார், ஜெயசித்ரா, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், பள்ளி நிர்வாகிகள் ஜெயராஜ், பழனிச்சாமி.