திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று விமரிசையாக நடக்க உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் ராட்சத கொப்பரையை தோளில் சுமந்தபடி கரடு முரடான பாறை பாதையில் எடுத்து கோவில் ஊழியர்கள் சென்றனர்.
திருவண்ணாமலை கிரிவலம் குழு நண்பர்கள் சார்பில் கார்த்திகை தீப விழாவின் போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 13வது ஆண்டாக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கல்யாண மண்டபம், கொத்தவால்சாவடி.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பாத்திரத்தால் தலையை மறைத்தவாறு இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாய்- மகன். இடம்: தாம்பரம்.