திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, இந்த ஆண்டு பௌர்ணமி கிரிவலம் தொடங்கிவிட்டது. இதனால் சித்தர்கள் உலவும் புண்ணிய பூமியான கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன், மலையே மகேசனாகக் காட்சியளிக்கும் அண்ணாமலையைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
தீபத்திருநாளை முன்னிட்டு, ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்ரமணியர் கோவிலில், தீபம் ஏற்றிய பின் நடந்த திருவீதி உலாவில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்ரமணியர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டணி சார்பில் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் சமையல் செய்தனர்.