தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, இந்த ஆண்டு பௌர்ணமி கிரிவலம் தொடங்கிவிட்டது. இதனால் சித்தர்கள் உலவும் புண்ணிய பூமியான கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன், மலையே மகேசனாகக் காட்சியளிக்கும் அண்ணாமலையைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
24-Nov-2026

ShareTweetShareShare

2/

தீபத்திருநாளை முன்னிட்டு, ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்ரமணியர் கோவிலில், தீபம் ஏற்றிய பின் நடந்த திருவீதி உலாவில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்ரமணியர்.
24-Nov-2026

3/

கார்த்திகை பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தில், நேற்று, சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திரளான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
24-Nov-2026

4/

தாம்பரம் வேளச்சேரி முகுந்த் வரதராஜன் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இடம் :கிழக்கு தாம்பரம்
24-Nov-2026

5/

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தரிசனத்திற்காக மலை ஏறிய பக்தர்கள்.
24-Nov-2026

6/

மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
24-Nov-2026

7/

சென்னையில் காலை முதல் பெய்த லேசான சாரல் மழையால் நண்பகல்வரை நீடித்த பனி மூட்டம் காரணமாக புகை மூட்டமாக காட்சியளிக்கும் கடற்கரை.இடம் : பெசன்ட் நகர்
24-Nov-2026

8/

சென்னை நகரில் நேற்று கரூர் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல்.
24-Nov-2026

9/

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டணி சார்பில் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் சமையல் செய்தனர்.
24-Nov-2026

10/

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
24-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us