தாஜ்மஹால் பின்னணியில் குப்பைக் காடாக மாறிய யமுனை ஆறு திருத்தப்பட்ட செய்திப் பத்தி தில்லி உள்ளிட்ட மேல்நிலைப் பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர், ஆக்ரா நகரத்தின் சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவுநீர், திடக்கழிவுகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகளின் கழிவுகள் யமுனை ஆற்றின் நீரைப் பெருமளவில் மாசுபடுத்துகின்றன. இதன் எதிரொலியாக, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அருகே ஓடும் யமுனை ஆற்றில் குப்பைகளும், கழிவுகளும், நீர்வாழ் களைகளும் தேங்கி மிதக்கின்றன.
பியூர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் நடைபெற்ற 75-வது ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) போட்டியில், 2026-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பியூர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ
வாலாஜாபாத், பச்சையம்மன் கோவில் தெருவில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் பாதி துாரம் வரை மரம், செடி, கொடிகள் படர்ந்திருந்தன. இது குறித்து 23ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
புதுச்சேரி கடற்கரையில் நடந்த சி விஜில் கடலோர பாதுகாப்பு பயிற்சியை யொட்டி சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்:மின்ட் சுப்புராயன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை