கோவளம் - கேளம்பாக்கம் சாலையில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் உப்பங்கழியில் மேகக்கூட்டங்கள், அலையாத்திக் காடுகளுக்கு இடையே சிறு படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.இடம் : கேளம்பாக்கம்
முட்டுக்காடு படகு குழாம் அருகே முகத்துவாரம் பகுதியில் இரை தேடி கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரைகள், நீர் காகம் மற்றும் உள்ளான்கள்.இடம் : முட்டுக்காடு
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக சி விஜில் 2026 இரண்டு நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை முதல் நாள் சென்னை காசிமேட்டில் காவல்துறையினர் கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ.,விவகாரத்தை மறைக்க முயன்றதாக தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க., சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புகார் அளித்துள்ளார்.
பியூர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் நடைபெற்ற 75-வது ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) போட்டியில், 2026-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பியூர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ
தாஜ்மஹால் பின்னணியில் குப்பைக் காடாக மாறிய யமுனை ஆறு திருத்தப்பட்ட செய்திப் பத்தி தில்லி உள்ளிட்ட மேல்நிலைப் பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர், ஆக்ரா நகரத்தின் சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவுநீர், திடக்கழிவுகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகளின் கழிவுகள் யமுனை ஆற்றின் நீரைப் பெருமளவில் மாசுபடுத்துகின்றன. இதன் எதிரொலியாக, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அருகே ஓடும் யமுனை ஆற்றில் குப்பைகளும், கழிவுகளும், நீர்வாழ் களைகளும் தேங்கி மிதக்கின்றன.
வாலாஜாபாத், பச்சையம்மன் கோவில் தெருவில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் பாதி துாரம் வரை மரம், செடி, கொடிகள் படர்ந்திருந்தன. இது குறித்து 23ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.