ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பின் இரண்டாம் நாளில் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர் சங்க கூட்டத்தில் மாநிலத் தலைவர் சங்கர் பாபு பேசினார் (இடமிருந்து)மாவட்ட செயலாளர் சுப்பையா,மாவட்ட பொறுப்பாளர் மதுபாலன் ,உறுப்பினர் சேதுராமலிங்கம்.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், 2027-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஹரித்துவார் அர்த்த கும்பமேளாவை முன்னிட்டு, புகழ்பெற்ற ராம் ஜூலா தொங்கு பாலத்தைப் புதுப்பித்து சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்: மின்ட் சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.