சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் அமைச்சர்கள் கீர்த்தனா,முகமதுபர்வேஸ் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நிறைவாக அய்யங்குளத்தில் தெப்பம் உற்சவத்தில், சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள 2,668 அடி உயரமுள்ள மகா தீபம் ஏற்றப்பட்ட மலை மீது ஏற இரண்டாவது நாளாக தடை செய்யப்பட்டு, பாதையை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முடிந்தவுடன் சுவாமி தரிசனம் செய்ய இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
திருவண்ணாமல கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி முடிந்த பிறகு கிரிவலப் பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் சேலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் அதிகாலை பெய்த மழையால் கிரிவலப் பாதையில், மழை நீர் தேங்கியதால் நடந்து செல்ல பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதால், டிரோன் சர்வே ஆய்வு பணி நடந்தது.