சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பின் நிறைவு நாளான நேற்று சுவாமியை தரிசனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரில் உள்ள தியான மையத்தில் நடைபெற்ற சர்வதேச விளக்குத் திருவிழாவில், பங்கேற்பாளர்கள் காகித விளக்குகளை வானில் பறக்கவிட்டனர். வானில் ஒளிர்ந்த விளக்குகளின் பிம்பங்கள் கீழே இருந்த தண்ணீரில் எதிரொலித்தது அந்த நேர இரவுக் காட்சிக்கு மேலும் மெருகூட்டியது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், அம்மாநிலத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற கைவினை கண்காட்சியில், வண்ணம் தீட்டப்பட்ட காகிதக் கூழலான கலைப்பொருளைக் கையில் ஏந்தியுள்ளவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் அரசியல் அமைப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்தது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குளம் அகமது மிர், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தாம்பரம் நடைபாதை சுரங்க பாதை பல லட்ச ரூபாய் செலவில் சீரமைப்புகள் செய்யப்பட்ட நிலையில் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவானதால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது
அடாத மழையிலும் விடாத பேச்சு...திடீர் மழையில் நடந்து வந்த வட மாநில இளைஞர் தனது ஊர்காரருக்கு மழை பெய்வதை மொபைலில் கூறிக்கொண்டு நனைந்தபடி மகிழ்ச்சியாக வந்தார். இடம்:திருப்பூர், கோவில்வழி முத்தணம்பாளையம் ரோடு