தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இடம்பெற்றிருந்த உணவுகள்.
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் சுற்றுப்பயணம் வந்த பள்ளி மாணவர்கள், அங்கே கம்பீரமாக வீற்றிருந்த சிங்கத்தைக் கண்டதும் உற்சாகத்தில் சேருபாய்... சேருபாய் எனக் கோஷமிட்டனர்.
பறவை காய்ச்சல் அச்சத்தால் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் சுற்றித்திரிந்த புள்ளி மானை உற்சாகத்துடன் தொட்டு பார்த்து குதூகலித்த பொதுமக்கள்.
காசி தமிழ் சங்கமத்தின் 5ம் ஆண்டு நிகழ்வை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். உடன், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற பங்கேற்பாளர்கள். இடம்: வாரணாசி, உ.பி.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைக்க சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தாமதமாக வந்ததால் வெயிலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் சோர்ந்து மயங்கி காணப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், வேர்க்கடலை வரத்து அதிகரித்துள்ளது. சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள வேர்க்கடலைகளை தரம் பிரித்த தொழிலாளர்கள்.
செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.