பெண்கள் இடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் டாடா குழுமத்தின் டனேரா நிறுவனம் சார்பில் 10ம் ஆண்டு மாரத்தான் போட்டி கர்நாடகாவினவ் பெங்களூரில் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள், சிறுமியர்.
மக்களிடையே உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், 100 வாரங்களை நிறைவு செய்து, 37 லட்சம் மக்களை இணைத்துள்ளது. மஹாராஷ்டிராவின் பிம்பரிசின்ச்வாட்டில் நடந்தஇத்திட்டத்தின் 100வது வார நிகழ்வில் விளையாட்டு அர்வலர்களுடன் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு பழமையான குருத்வாரா ஸ்ரீகாரா சாஹிப், 1947 பிரிவினையின்போது மூடப்பட்டது. பாபா குரு நானக் தேவின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது புனரமைக்கப்பட்டு சீக்கிய பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.