ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் இந்திய, ஈராக் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் எளிய வகை பயிற்சியை மேற்கொள்ள அதனை அவர்கள் பின்பற்றி செய்தனர்
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலில் பாராட்டு விழா நடந்தது.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.