/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தசரா தோட்டக்கலை போட்டியில் 26 ஆண்டாக பரிசு வென்ற பெண்
/
தசரா தோட்டக்கலை போட்டியில் 26 ஆண்டாக பரிசு வென்ற பெண்
தசரா தோட்டக்கலை போட்டியில் 26 ஆண்டாக பரிசு வென்ற பெண்
தசரா தோட்டக்கலை போட்டியில் 26 ஆண்டாக பரிசு வென்ற பெண்
UPDATED : பிப் 26, 2025 05:11 PM
ADDED : பிப் 23, 2025 11:11 PM

விஜய தசமியை ஒட்டி, மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்றது. தசராவை ஒட்டி இளைஞர், விவசாயம், சிறுவர், தோட்ட கலை உட்பட பல வகையான தசராக்கள் நடக்கும். இதில் பரிசு பெறுவதை மக்கள் கவுரவமாக பார்ப்பர். ஆனால் ஒரு பெண், 26 ஆண்டுகளாக தொடர்ந்து தோட்ட கலை போட்டியில் பரிசு பெற்று சாதனை படைத்து உள்ளார்.
மைசூரு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் ஷியாமளா பிரசன்னா, 56. ஒவ்வொரு ஆண்டும் தோட்ட கலை தசராவின் போது, ஒரு இடத்தை பிடித்து கொள்வர். அந்த இடத்தில் சிறிய தோட்டம் போன்று அமைத்து, சிறிய சிலைகளை காட்சிப்படுத்துவார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திருமணத்திற்கு பிறகு, 1990 ம் ஆண்டு மைசூரில் குடியேறினேன். எனக்கும், மைசூரு தசராவுக்கும் இடையில் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தோட்ட கலை தசராவில் பங்கேற்று ஏதாவது ஒரு பரிசு பெற்று விடுவேன். எனது வீட்டின் தோட்டத்திலும் நிறைய படைப்பாற்றல்களை வைத்து உள்ளேன்.
பச்சை, பசேலென காட்சி அளிக்கும் தோட்டத்தில், அழகாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை வைப்பது கூடுதல் அழகு சேர்க்கும்.
மறைந்த ஊடக பத்திரிகையாளர் சத்யன், எங்கள் தோட்டத்திற்கு அடிக்கடி வருவர். புல்வெளிகள் மீது அமர்ந்து புத்தகம் படித்துவிட்டு இங்கிருந்து மகிழ்ச்சியாக புறப்பட்டு செல்வார். எனது தோட்டத்தில் போன்சாய் செடிகளையும் வளர்த்து வருகிறேன்.
மன அமைதிக்காக வீட்டில் அனைவரும் தோட்டம் அமைக்கலாம். தோட்டத்தை பராமரிப்பது தனி சுகம்.
குழந்தைகள் போல பராமரிக்க வேண்டும். அப்படி செய்தால் பச்சை குழந்தைகள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

