தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ இளசுகளுக்கு சவால் விடும் 75 வயது யதுகிரி கோபாலன்

 இளசுகளுக்கு சவால் விடும் 75 வயது யதுகிரி கோபாலன்

 இளசுகளுக்கு சவால் விடும் 75 வயது யதுகிரி கோபாலன்


ADDED : பிப் 16, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக பெண்கள் பலரும், திருமணமாகி, குழந்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்ததாக கருதுகின்றனர். தங்களின் திறமைகளை உள்ளுக்குள் மறைத்து கொள்கின்றனர். சாதனைக்கு வயதோ, முதுமையோ தடையாக இருக்காது என்பதற்கு, டாக்டர் யதுகிரி கோபாலன் சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.

மைசூரு நகரில் வசிப்பவர் யதுகிரி கோபாலன், 75. இவர் டாக்டராக தொழில் செய்கிறார். 60 வயது தாண்டிவிட்டால், முதுமை வந்துவிட்டது என, புலம்புவோரே அதிகம். ஆனால் 75 வயதிலும் முதுமைக்கு சவால் விடும் யதுகிரி கோபாலன், சங்கீதம், நடனம், ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டுள்ளார். இக்கலைகளில் சிறந்து விளங்குகிறார். கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்துள்ளார்.

குறிப்பாக கன்னட பாடல்களுக்கு, அற்புதமாக நடனமாடுவார். இதுவரை 2,000க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார். உள்ளூர் நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, கோவா, துபாய் உட்பட, வெளி மாநிலங்கள், நாடுகளிலும் தன் கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். மைசூரின் பெருமையை, சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார்.

நடனம், இசையுடன் ஓவியக்கலையிலும், யதுகிரி கோபாலன் கை தேர்ந்தவர். இவரது வீடு முழுதும் விருது பலகைகள், கேடயங்கள், பதக்கங்களால் நிரம்பியுள்ளன. யதுகிரிக்குள் வேறு ஒரு திறமையும் ஒளிந்துள்ளது. தேவையின்றி வீசியெறியும் பொருட்களை, கலைப்பொருட்களாக உருவாக்குகிறார்.

அது மட்டுமின்றி, பேஷன் ஷோக்களிலும் பங்கேற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதுமையிலும் மேடையில் ஸ்டைலாக நடை போடுகிறார். இவரது கலைச்சாதனையை பாராட்டி, 'டாக்டரேட்' பட்டமும் கிடைத்துள்ளது. ஸ்த்ரீ ரத்னா, கலா ரத்னா, வித்யாரண்யா, மைசூரு நட்சத்திரா, கித்துார் ராணி சென்னம்மா உட்பட, 2,000க்கும் மேற்பட்ட விருதுகள், இவரை தேடி வந்தன. இவை அவரது திறமைக்கு சாட்சியாகும்.

டாக்டர் யதுகிரியின் வாழ்க்கை, பெண்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் வழிகாட்டியாக, உள்ளது. தன்னம்பிக்கையை அளிக்கிறது. வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும். முதுமை சாதனைக்கு ஒரு தடையே அல்ல என்பதற்கு, இவர் ஒரு எடுத்துக்காட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us