/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
' மாடலிங் ' கில் சாதிக்கும் சிக்கமகளூரு சிறுமி
/
' மாடலிங் ' கில் சாதிக்கும் சிக்கமகளூரு சிறுமி
ADDED : ஆக 17, 2025 10:07 PM

சிக்கமகளூரு இயற்கை கொட்டி கிடக்கும் மாவட்டம் மட்டுமல்ல. பல சாதனை யாளர்களை உருவாக்கியுள்ளது. கன்னட திரையுகில் உள்ள பலர், இதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் வரிசையில் ஆத்யா சாலியன்வு ம் சேர்ந்துள்ளார்.
இன்றைய காலத்தில், பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அன்று கரண்டியை பிடித்த கைகள், இன்று கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடுகின்றனர். போலீஸ் துறை, விளையாட்டு, ஐ.டி., துறை, விண்வெளி, தொழில், மருத்துவம் என, அனைத்து துறைகளிலும் பெண் சாதனையாளர்களை பார்க்க முடிகிறது.
அதே போன்று திரையுலகில், மாடலிங் உலகிலும் கொடி கட்டி பறக்கின்றனர். இளம் பெண்கள் மட்டுமின்றி, சிறுமியரும் சாதனைகளில் பின் தங்கவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகரே தாலுகாவின் பிலிகுலா கிராமத்தில் வசிப்பவர்கள் தாரு பூஜாரி -- தனிஷ்கா தம்பதியின் மூத்த மகள் ஆத்யா சாலியன், 15. சிறிய வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்த இவர், பல சாதனைகள் செய்துள்ளார். மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன் குடகில் தேசிய அளவிலான 'சூப்பர் மாடலிங் ஆப் கர்நாடகா' போட்டி நடந்தது. இதில் ஆத்யா பங்கேற்று, முதல் பரிசு பெற்றுள்ளார்.
பெங்களூரிலும் ஆத்யா பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று, முதல் பரிசு பெற்று தன் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். மாடலிங் துறையில் பெண்களின் சாதனைக்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி சாதனை செய்கின்றனர்.
ஆத்யா சிறு வயதிலேயே இத்துறைக்கு வந்ததுடன், சாதனைகளும் செய்கிறார். தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளுக்கும் தன்னை தயார்படுத்துகிறார்.
மகளின் சாதனைக்கு பெற்றோர் உறுதுணையாக நின்று, ஊக்கப்படுத்துகின்றனர். இந்த துறையில் தங்களின் மகள், மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பது, பெற்றோரின் கனவாகும். இதை மகள் நிறைவேற்றுவார் என, நம்பு கின்றனர்.
- நமது நிருபர் -