sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ நெஞ்சம் மறப்பதில்லை கன்னட நடிகை ஸ்ரீ ரக் ஷாவின் பிரத்யேக நேர்காணல்

 நெஞ்சம் மறப்பதில்லை கன்னட நடிகை ஸ்ரீ ரக் ஷாவின் பிரத்யேக நேர்காணல்

 நெஞ்சம் மறப்பதில்லை கன்னட நடிகை ஸ்ரீ ரக் ஷாவின் பிரத்யேக நேர்காணல்


ADDED : பிப் 23, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

கன்னட சூப்பர் ஸ்டார்களான ராஜ்குமார், விஷ்ணுவர்தன், உபேந்திரா, சிவகுமார் ஆகியோருடன் நடித்த மூத்த நடிகையும், மெகா தொடர், சீரியல் போன்றவற்றில் நடித்து அசத்தியவருமான கன்னட சினிமா உலகின் மூத்த நடிகையாக இருக்கும் ஸ்ரீ ரக் ஷாவின் பிரத்யேக நேர்காணல்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மூத்த நடிகையாக சாண்டல்வுட்டில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

என், 13 வயதில் சினிமாவுக்குள் நுழைந்தது முதல் பல படங்களில் கதாநாயகியாக நடித்தது மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது. குழந்தை பருவத்தில் பயம், துரு துருவென இருப்பேன். கடந்து வந்த பாதையில் உள்ள மலரும் நினைவுகளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.

கன்னட நடிகர் சங்கர்நாகுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

சங்கர்நாக் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். இதனால், என்னை போன்ற சக நடிகர்களும் ஷூட்டிங்கிற்கு முன்னதாகவே வந்துவிடுவோம். அவரிடமிருந்து ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வருதைக் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் நடித்த சீரியலில் உங்கள் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம் எது?

'கன்னியாதானா' சீரியலில் நடித்த சரோஜினி தேவி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த சீரியல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானது. இந்த சீரியலை நடிகை சரோஜா தேவி தொடர்ச்சியாக பார்த்தார். அவர் என்னை பாராட்டி வாழ்த்தியதை, என்றும் மறக்க மாட்டேன்.

கன்னட 'டிவி' சீரியல்களின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

கடந்த 80, 90 காலகட்டங்களில் துார்தர்ஷனில் சீரியல்கள் வெளிவந்தன. அப்போது, குறைந்த பட்ஜெட்டில் சீரியல்கள் எடுக்கப்பட்டன. தற்போது, சீரியல்கள் அதிக பொருட்செலவில் சினிமாவுக்கு இணையாக எடுக்கப்படுகின்றன.

மீண்டும் எப்போது உங்களை வெள்ளித்திரை, சின்னத்திரையில் பார்ப்பது?

நானும் அதற்காக தான் தயாராகி வருகிறேன். கிடைக்கிற நேரத்தை எனது குடும்பத்துடன் செலவிட்டு வருகிறேன். நானே ஒரு படத்தை இயக்கலாம் என திட்டமிட்டு உள்ளேன். அதற்காக, தயாரிப்பாளர் கிடைத்ததும் விரைவில் அறிவிப்பேன். சீரியலில் முக்கிய கதாபாத்திரம் என்றாலும் மீண்டும் நடிப்பேன்.

இளம் நடிகையருக்கான தங்களது அட்வைஸ்?

இரண்டு படங்களின் மூலம் பட்டி தொட்டி எல்லாம், பிரபலமானவர்கள் கூட, காணாமல் போய் உள்ளனர். எனவே, எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும், வந்த வழியை மட்டும் மறந்து விடக்கூடாது.

இரவில் துாங்கும் போது பாட்டு கேட்கும் பழக்கம் உண்டா?

நிச்சயமாக. இரவு துாங்குவ தற்கு முன்பு அறையில் லைட் ஆப் செய்துவிட்டு, இளையராஜா பாடல்களை கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

இளையராஜாவின் இசையில் வெளியான 'கேளடி கண்மணி' பாடலை கே ட்காமல் துாங்க மாட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us