தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ 1.30 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் பெண் 'ஆர்கிடெக்ட்'

1.30 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் பெண் 'ஆர்கிடெக்ட்'

1.30 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் பெண் 'ஆர்கிடெக்ட்'


ADDED : ஏப் 21, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடிநீரின் முக்கியத்துவம் அறிந்த பெண் ஆர்கிடெக்ட் ஒருவர், தனது வீட்டில் ஆண்டுக்கு 1.30 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் வகையில் பிரமாண்ட தொட்டி வடிவமைத்து உள்ளார்.

கட்டட கலைஞர்


மழைநீரை சேகரித்து, நீர்ப்பாசனம், துணி துவைப்பு, குடிநீர் போன்ற பல்வேறு வகைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இதை பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி ராயபுரோலு உணர்ந்துள்ளார். கட்டட கலை நிபுணர் எனும் ஆர்கிடெக்ட்டான இவர், 'டிசைன் ஹார்மொனி' என்ற பெயரில் ஆர்கிடெக்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க விரும்பிய அவர், பெங்களூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டுமானத்தின் போது தோண்டி எடுக்கப்பட்ட மண்ணில் இருந்து வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கற்களால், வீட்டை கட்டி உள்ளார். இவ்வீட்டில் கோடை காலத்திலும் குளு குளுவென்று குளிர்ந்த காற்று வீசுகிறது. இவர் கட்டி உள்ள வீடு, வனத்துக்குள் இருப்பது போன்று உள்ளது. வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் தான்.

1.3 லட்சம் லிட்டர்


வீட்டின் காம்பவுண்ட் கேட்டில் இருந்து இருபது அடி எடுத்து வைத்தால் வீட்டின் வாசல் படி வந்து விடும். வீட்டின் முகப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் அமைத்து உள்ளார். மழை காலங்களில் இந்த டேங்கில், ஆண்டுதோறும் 1.3 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.

இத்துடன், குளியல் அறை, சமையல் அறையில் பயன்படுத்தும் நீர் ஆகியவை வீட்டின் பின்புறம் உள்ள, 'பாப்பில் டேங்க்' எனும் தடுப்பு தொட்டியில் சேரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இந்த தண்ணீர், நீர்வாழ் தாவரங்களுக்கு பாய்ச்சப்படும். இதையடுத்து மீதமுள்ள தண்ணீர், 'பயோடைவர்ஸ்ட் எனும் உயிர் செரிமானம்' திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் சேரும். சூரிய ஒளி படும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கும். இதன் மூலம், தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். இந்த தண்ணீரை மீண்டும் தோட்டங்கள், குளியல் அறை, சமையல் அறையில் பாத்திரம் கழுவுவது போன்றவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இவரின் யோசனையால், 'இந்தாண்டுக்கான சிறந்த தேசிய கட்டட கலைஞர்' என்ற விருதை பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us