தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ ஜெர்மனி மகளிர் கிரிக்கெட் பெங்களூரு சரண்யா சாதனை

 ஜெர்மனி மகளிர் கிரிக்கெட் பெங்களூரு சரண்யா சாதனை

 ஜெர்மனி மகளிர் கிரிக்கெட் பெங்களூரு சரண்யா சாதனை


ADDED : ஜன 12, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் ஆண்களின் விளையாட்டு என்று கூறப்பட்ட

கிரிக்கெட்டை தற்போது பெண்களும் விளையாடுகின்றனர்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிடைப்பது போன்று, பெண்கள் அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த பெண்கள், வெளிநாட்டு கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்று சாதிக்கின்றனர். இவர்களில் ஒருவர் சரண்யா சதரங்கனி, 30. கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த இவர், ஜெர்மனி மகளிர் கிரிக்கெட் அணிக்காக இப்போது விளையாடுகிறார்.

இவரது 7 வயதில் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் இணைந்து விளையாடி உள்ளார். இவரது ஆர்வத்தை கண்ட பெற்றோர், கர்நாடக கிரிக்கெட் நிறுவனத்தில் சேர்த்து விட்டனர்.

அங்கு பயிற்சி பெற்ற இவர், தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம், கர்நாடக மாநில பெண்கள் கிரிக்கெட்டில் இடம் கிடைத்தது. 'அன்டர் 16, அன்டர் 19' வயதுக்கான கிரிக்கெட்டில், தற்போது இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான வேதா கிருஷ்ணமூர்த்தி தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.

பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்ததும் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற சரண்யாவுக்கு, எசெக்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியில் சில காலம் விளையாடி விட்டு, இன்னொரு பட்டப்படிப்புக்காக ஜெர்மனி சென்றார்.

ஜெர்மனியின் அண்டை நாடான டென்மார்க்கில் உள்ள கிளப் அணிக்கு விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கடந்த 2017ல் டென்மார்க் தேசிய அணிக்கு தேர்வான அவர், விக்கெட் கீப்பராக ஜொலித்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜெர்மனி மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது வரை அந்த அணிக்காக விளையாடுகிறார்.

இதுவரை 40 போட்டிளில் விளையாடி 252 ரன்கள் அடித்து உள்ளார். 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

கிரிக்கெட் ஒரு பக்கம் விளையாடினாலும், இன்னொரு பக்கம் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். வரும் காலத்தில் ஜெர்மனி மகளிர் கிரிக்கெட்டிற்கு, தலைமை தாங்கும் வாய்ப்பும் சரண்யாவுக்கு கிடைக்கலாம். கடல் கடந்து படிக்க சென்றவர், இப்போது கிரிக்கெட்டிலும், வாழ்க்கையிலும் சாதித்து வருகிறார். இவரது கணவர், ஜெர்மனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us