தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ ஆடை வடிவமைப்பில் அசத்தும் லதா புட்டண்ணா

 ஆடை வடிவமைப்பில் அசத்தும் லதா புட்டண்ணா

 ஆடை வடிவமைப்பில் அசத்தும் லதா புட்டண்ணா


ADDED : ஆக 16, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பெங்களூரின் சதாசிவநகர் பகுதியில் வசிப்பவர் லதா புட்டண்ணா. கடந்த, 36 ஆண்டுகளாக ஆடை வடிவமைப்பில் தனக்கென ஓர் இடம் பிடித்து அசத்துகிறார். ஜெயநகர் முதலாவது பிளாக் சித்தாபுரா பகுதியில், லதா புட்டண்ணாவின் 140 ஆண்டு பழமையான பாரம்பரிய வீடு உள்ளது. இந்த வீட்டை ஆடை வடிவமைப்பு மையமாக பயன்படுத்துகிறார்.

ஆரம்ப கட்டத்தில், ஆடை வடிவமைப்பு குறித்து முறையாக எதுவும் படிக்கவில்லை. அவரது தாய் அணியும் ஆடைகள் முறையாலும், வடிவமைப்புகளாலும் ஈர்க்கப்பட்டு, இந்த துறைக்குள், 1992ல் நுழைந்தார்.

தனது வீட்டில், இரு கைவினை கலைஞர்களுடன் இணைந்து, சிறிய தையல் கூடமாக துவங்கிய ஆடை வடிவமைப்பு கூடம், இன்று உலக புகழ்பெற்ற பிராண்டாக உயர்ந்து நிற்கிறது.

முற்றிலும் மாறுபட்ட வண்ண கலவைகளை, ஆடைகளில் சிறப்பாக கையாண்டு வருகிறார். கலம்காரி, பந்தினி போன்ற இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை அஜராக், ஆரி போன்ற எம்பிராய்ட் வேலைப்பாடுகளுடன் இணைந்து, மிக நேர்த்தியாக ஆடைகளில் இணைக்கிறார்.

தென் மாநிலங்களில் நெசவு பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், கர்நாடகா, தமிழகம், கேரளா, தெலுங்கானா மாநில பாரம்பரிய நெசவாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். காதி, பட்டு, ஷிப்பான் உள்ளிட்ட துணிகளில் சூழலியலுக்கு ஏற்ப ஆடை வடிவமைப்பை செய்து அசத்துகிறார்.

அதிலும், தற்போதைய இளம்பெண்களுக்கு பிடித்த லஹங்கா ஆடைகள் வடிவமைப்பில் தனக்கென உரிய பாணியில், பல டிசைன்களை செய்து வருகிறார்.

நெசவாளர்களுக்கு ஆதரவு லதா புட்டண்ணா கூறியதாவது:

நான் சிறுமியாக இருந்து வளர்ந்த காலத்தில், பெரிய வணிக வளாகங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் கிடையாது. மக்கள் துணியை வாங்கி தையல்காரர்களிடம் கொண்டு சென்று தைத்து கொண்டனர். சிறு வயதில், துணிகளை நானே தையல்காரரிடம் எடுத்து சென்றுள்ளேன். ஆடைகளின் வெட்டு முறைகள், வடிவமைப்புகளை தீர்மானித்த அனுபவமே ஆடை வடிவமைப்பின் மீது ஆர்வத்தை விதைத்தது.

காகிதப்பூ என்று அழைக்கப்படும் போஹைன்வில்லா மலர்களின் வண்ணங்களை அடிப்படையாக கொண்டு, கோடை காலத்திற்கு ஏற்ற, இலகுவான ஆடைகளை வடிவமைத்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்தியாவில் ஆடை வடிவமைப்பு என்பது அதன் அசல் தன்மையை இழந்து வருகிறது. பாரம்பரிய நெசவுக் கலைகளும், மிகக் குறைந்த ஊதியத்திற்காக இரவும் பகலும் உழைக்கும் கைவினைஞர்களும் இங்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த அரிய கலை அழியாமல் இருக்க, நெசவாளர்களுக்கு நாம் தகுந்த ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லதா புட்டண்ணாவின் தயாரிப்புகளை lathaputtana official online store என்ற இணையமுகவரியில் சென்று பார்த்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us