தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ புத்தகத்தை பார்க்காமல் பசவண்ணரின் வசனங்களை சரளமாக கூறும் லாவண்யா

 புத்தகத்தை பார்க்காமல் பசவண்ணரின் வசனங்களை சரளமாக கூறும் லாவண்யா

 புத்தகத்தை பார்க்காமல் பசவண்ணரின் வசனங்களை சரளமாக கூறும் லாவண்யா


ADDED : ஏப் 26, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 11:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

ஏழாம் வகுப்பிலேயே லிங்க தீட்சை பெற்றுக்கொண்ட சிறுமி, பசவண்ணரின் 1,800க்கும் மேற்பட்ட வசனங்களை, புத்தகத்தை பார்க்காமல் அச்சு பிசகாமல் சரளமாக கூறி, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.

பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலா தாலுகாவின் சானேகொப்பா கிராமத்தில் வசிக்கும் மஞ்சுநாத், கிரிஜா தம்பதியின் மகள் லாவண்யா அங்கடி, 15. இவர் இதே கிராமத்தின் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

லிங்க தீட்சை ஏழாம் வகுப்பு படிக்கும் போது, கோடை விடுமுறையில், பெலகாவியின் நாகநுாரின் ருத்ராட்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லாவண்யா, அங்கேயே லிங்க தீட்சை பெற்று கொண்டார். பசவண்ணர் எழுதிய வசனங்களை பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சரணர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். தினமும் லிங்க பூஜையில் ஈடுபட்டார். புத்தகத்தை பார்க்காமல் 1,800க்கும் மேற்பட்ட வசனங்களை, அச்சு பிசகாமல் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.

நெலமங்களாவில் 2025 ஏப்ரல் 29ல், நடந்த தேசிய அளவிலான 1,000 வசனங்களை மனப்பாடமாக கூறும் போட்டியில் பங்கேற்றார். மூன்று மணி நேரத்தில் 1,051 வசனங்களை வாசித்து, முதல் இடத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு கிடைத்தது.

2,000 வசனங்கள் அதற்கு முன் 2022ல் தாலுகா அளவிலான வசனங்கள் கூறும் போட்டியில் பங்கேற்று, 30 நிமிடங்களில் 81 வசனங்களை வாசித்து, ஆறுதல் பரிசு பெற்றார். 2023 நவம்பரில் சித்ரதுர்காவின் முருகா மடம், பீதரின் பசவ கல்யாண், ஹாவேரி உட்பட பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றுள்ளார்.

பசவண்ணரின் வசனங்களை கூறுவதில், லாவண்யா, 'சாம்பியன்' ஆக விளங்குகிறார். 2025 ஜூலை 26ல் நடந்த போட்டியில், பசவண்ணர் உட்பட பல சிவசரணர்களின் 1,800 வசனங்களை வாசித்து அசத்தினார். வரும் நாட்களில் 2,000 வசனங்களை வாசிப்பது, இவரது இலக்காகும்.

இது குறித்து, லாவண்யா கூறியதாவது:

பசவண்ணரின் வசனங்கள் நமது மனதுக்கு வெளிச்சத்தை தரும். நாம் எப்படி வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. வசனங்களை வெறும் மனப்பாடம் செய்யாமல், அதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் சமுதாயத்தில் சிறந்த பிரஜைகளாக வாழலாம்.

பசவண்ணரின் 900 வசனங்கள், அல்லம பிரபு, சித்தராமேஸ்வரா, அக்கமஹாதேவி, ஜேடத்தாசிமய்யா, அம்பிகர சவுடய்யாவின் தலா 100 வசனங்கள், மற்ற சிவ சரணர்களின் 300 வசனங்களை என்னால், பார்க்காமல் வாசிக்க முடியும். இந்த சாதனையில் என் தாயின் பங்களிப்பும் உள்ளது.

ஆரம்ப நாட்களில், தினமும் 10 வசனங்களை மனப்பாடம் செய்தேன். அதன்பின் தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 50 வசனங்களை படித்தேன். பள்ளியில் நான் தான் முதல் மாணவி. தற்போது 10ம் வகுப்புக்கு சென்றுள்ளேன். நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற, இலக்கு நிர்ணயித்துள்ளேன். லிங்க பூஜையால் எனக்குள் தெளிவு, அறிவு அதிகரித்தது. மேடையில் பேசும் தைரியமும் வந்தது. நான் படித்த வசனங்கள், பாடங்கள் போட்டியில் பங்கேற்கும் போது, தேர்வு எழுதும் போது என் கண் முன்னே வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us