தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ உலக போட்டிகளில் சாதிக்க உதவும் உள்ளூர்; மங்களூரில் நடந்த அழகி போட்டியில் ஆர்வம்

உலக போட்டிகளில் சாதிக்க உதவும் உள்ளூர்; மங்களூரில் நடந்த அழகி போட்டியில் ஆர்வம்

உலக போட்டிகளில் சாதிக்க உதவும் உள்ளூர்; மங்களூரில் நடந்த அழகி போட்டியில் ஆர்வம்


ADDED : ஜன 19, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவின் தட்சிண கன்னடாவின் மாவட்டத்தில் உள்ளது மங்களூரு நகரம். இங்குள்ள பல பெண்கள் மாடலிங் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவர். பெரும்பாலான பெண்கள் தங்கள் கல்லுாரி படிப்பிலேயே மாடலிங்கில் இறங்கி விடுவர். இவர்களுக்கு மிகப்பெரிய, 'ரோல் மாடலாக' உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யாராய் உள்ளார். அதற்கு காரணம் அவர் மங்களூரில் பிறந்தவர் என்பதே.

இப்படிப்பட்ட மங்களூரில் நடக்கும் அழகி போட்டிகளும் பிரசித்தி பெற்றவையே. அந்த வகையில், வென்ஸ் மாடல் அகாடமியின், 'கர்நாடகா க்ரவுன் 2026' அழகி போட்டி சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், 46 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். கன்னட நடிகை ரிஷா கவுடா நடுவராக இருந்தார்.

இதில், டீன் கேட்டகிரியில், முதலிடத்தில் ரெனிஷா டிசோசா; இரண்டாம், மூன்றாம் இடங்கள் முறையே மோக் ஷா, ஆத்யா சல்யன் ஆகியோர் பெற்றனர்.

'மிஸ் கேட்டகிரி'யில் முதலிடத்தை அயோனா மெனசஸ், 2 வது இடத்தை அதிதி ஆச்சார்யா, 3 வது இடத்தை ஷான்விதா செக்வேரா ஆகியோர் பிடித்தனர்.

முதல் பரிசாக 10,000 ரூபாயும்; 2வது பரிசாக 7,000 ரூபாயும்; 3வது பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதை தவிர, அவர்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த அழகி போட்டி பார்ப்போரை பரவசத்தை ஏற்படுத்தியது. வண்ண உடைகளில் வண்ண மீன்களாகள காட்சி அளித்த பெண்களின் அழகை பார்த்த பலரும் மயங்கினர். இது தவிர சிறுமியரின் ஆட்டம், பாட்டம் மேடையை அலங்கரித்தன.

இப்போட்டியில் பங்கேற்ற அழகிகள் கூறியதாவது:

அழகி போட்டிக்காக பல மைல் துாரம் செல்ல வேண்டி உள்ளது. அப்படி இருக்கையில் மங்களூரிலே அழகி போட்டிகள் நடத்துவது சிறந்த விஷயம். இது, எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உலக அளவிலான போட்டிகளில் சாதிக்க, உள்ளூரில் போட்டிகள் நடத்தப்படுவது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us