தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ 'மிசஸ் இந்தியா' தேசிய அழகி போட்டியில் வென்ற

 'மிசஸ் இந்தியா' தேசிய அழகி போட்டியில் வென்ற

 'மிசஸ் இந்தியா' தேசிய அழகி போட்டியில் வென்ற


ADDED : செப் 27, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பெங்களூரில் நடந்த 'மிசஸ் இந்தியா' தேசிய அழகி போட்டியில் ஹூப்பள்ளியை சேர்ந்த டாக்டர் ரஷ்மி மானி வெற்றி பெற்றார்.

பெங்களூரின் வித்யாரண்யபுராவில் உள்ள, 'கிங்க் மெனோஸ்' சொகுசு திருமண ஹாலில், பிரதீபா பாட்டீல் ஒருங்கிணைப்பில், தேசிய அளவிலான, 'மிசஸ் இந்தியா' அழகி போட்டி நடந்தது. செப்டம்பர் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 27 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஹூப்பள்ளியை சேர்ந்த டாக்டர் ரஷ்மி மானியும் பங்கேற்றிருந்தார். பல்வேறு சுற்றுகளில் நடந்த போட்டியில் பங்கேற்று, தன் திறமையை வெளிப்படுத்தினார். இறுதி சுற்றிலும் தன் திறமை, தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி, 'மிசஸ் இந்தியா நேஷனல்' கிரீடத்தை வென்றார்.

ரஷ்மி மானி தொழிலில் டாக்டர். மருத்துவத்தில் பல பட்டங்களை பெற்றவர். மருத்துவத்தில் சாதனை செய்யும் இவர், தற்போது அழகி போட்டியிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார். கர்நாடகாவுக்கும், ஹூப்பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து ரஷ்மி மானி கூறியதாவது:

ஆன்லைன் ஆடிஷனில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அதில் நான் தேர்வு செய்யப்பட்ட பின், பெங்களூரில் இறுதி போட்டி நடத்தப்பட்டது. செப்டம்பர் 8 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் பல சுற்றுகளில் போட்டிகள் நடந்தன. இதில் டில்லி, தமிழகம், ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பேராசிரியர்கள், சி.இ.ஓ.,க்கள் உட்பட பல துறைகளை சார்ந்தவர்கள் இருந்தனர். மருத்துவ துறையில் இருந்து போட்டியிட்டது, நான் மட்டுமே. அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று கிரீடம் வென்றேன். வரும் டிசம்பரில், பிலிப்பைன்சில் இன்டர்நேஷனல் அழகி போட்டி நடக்கவுள்ளது. அதிலும் பங்கேற்க நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

நான் டாக்டர் தொழிலிலேயே தொடர விரும்புகிறேன். வெளி அழகை விட மனதில் உள்ள அழகே முக்கியம். சாதனைக்கு வயது எப்போதுமே தடையாக இருக்காது என்பதை நிரூபித்ததில் நான் மகிழ்கிறேன். என் சாதனையை பார்த்து என் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மிகவும் மகிழ்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us