தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ மிஸஸ் குளோப் கிளாசிக் - 2026 பட்டம் வென்ற அர்பிதா லங்கேஷ்

 மிஸஸ் குளோப் கிளாசிக் - 2026 பட்டம் வென்ற அர்பிதா லங்கேஷ்

 மிஸஸ் குளோப் கிளாசிக் - 2026 பட்டம் வென்ற அர்பிதா லங்கேஷ்


ADDED : ஆக 02, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கடந்த மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை, மிஸஸ் குளோப் கிளாசிக் - 2026 போட்டிகள் நடந்தன. 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் சர்வதேச அழகு போட்டியாக உள்ளது. பெண்களின் பக்குவம், அழகு, புத்திக்கூர்மை, ஆளுமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவது இப்போட்டியின் நோக்கமாக உள்ளது.

இப்போட்டியில் பல நாடுகளின் பெண்கள் பங்கேற்றனர். மாலை நேர ஆடை அணிவகுப்பு, நீச்சல் குளத்தில் அணியும் ஆடை அணிவகுப்பு, ஆளுமை திறன் நேர்காணல் போன்ற பல சுற்றுகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இப்போட்டியில், கர்நாடகாவை சேர்ந்த அர்பிதா லங்கேஷ் வெற்றி பெற்று பட்டம் வென்றுள்ளார். இவர், பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷின் மனைவி ஆவார். ஐ.டி., துறையின் நிபுணரான அர்பிதா, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தொழில் முனைவோராகவும் உள்ளார்.

பட்டம் வென்றது குறித்து, அர்பிதா கூறியதாவது:

மிஸஸ் குளோப் கிளாசிக் - 2026 என்பது வெறும் அழகுக்கான போட்டி மட்டும் இல்லை. ஆளுமையை வெளிப்படுத்தும் போட்டி. இங்கு வந்திருந்த அனைவரும் தொழில்முறையாக போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வெல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இப்போட்டியில் பங்கேற்கும் முன் உடற்பயிற்சி, உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். எனக்காக ஆடையை நயனா என்ற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்து கொடுத்தார். நிறைய பேசவும் கற்று கொள்ள வேண்டி இருந்தது. போட்டியில் 30 வினாடிகளில் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும். அங்கு நாம் பேசும் தொனி மிகவும் முக்கியமானது. இந்த போட்டிக்கு வந்த விதத்தை பற்றியும், அதற்காக சந்தித்த சவால்கள் பற்றியும் விரிவாக விளக்க வேண்டி இருந்தது.

நான், 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் எனது லட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. திருமணத்திற்கு பின்னரும் படித்தேன். மனைவி, தாய், மனைவி என பொறுப்புகளை சமாளித்தேன். எனது இந்த வெற்றிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், வழிகாட்டிகள் அளித்த ஆதரவு தான் காரணம். அவர்களுக்கு எனது வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us