/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கைகள் இல்லை... தன்னம்பிக்கை உள்ளது; ! கால்களை வைத்து சாதிக்கும் சபிதா
/
கைகள் இல்லை... தன்னம்பிக்கை உள்ளது; ! கால்களை வைத்து சாதிக்கும் சபிதா
கைகள் இல்லை... தன்னம்பிக்கை உள்ளது; ! கால்களை வைத்து சாதிக்கும் சபிதா
கைகள் இல்லை... தன்னம்பிக்கை உள்ளது; ! கால்களை வைத்து சாதிக்கும் சபிதா
ADDED : டிச 08, 2025 05:46 AM

- நமது நிருபர் -
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா, கர்தாடி கிராமத்தில் வசிப்பவர் சபிதா மோனிஷ், 35. பிறந்ததில் இருந்தே இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. பள்ளியில் சேர்த்த பின், கால்களையே கைககளாக பயன்படுத்த துவங்கினார். தற்போது மூடபித்ரியில் உள்ள ஆலுவாஸ் கல்வி நிறுவனத்தில், குழந்தைகள் நல அதிகாரியாக வேலை செய்கிறார்.
தனது வாழ்க்கை பயணம் குறித்து சபிதா கூறியதாவது:
இரு கைகளும் இல்லாமல் தான் பிறந்தேன். 5 வயதாக இருந்த போது, எனது சகோதரர், சகோதரிகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து எனக்கும் பள்ளிக்கு செல்வதற்கு ஆசை வந்தது. பெற்றோர் என்னை பள்ளியில் சேர்க்க முயன்றனர்.
ஆனால் எனக்கு கைகள் இல்லாததால், பள்ளியில் சேர்த்து கொள்ள மறுத்தனர். இதனால் வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடியில் படித்தேன்.
கைகள் தான் இல்லை; கால்களை கைகளாக மாற்றி கொள்ளலாமே என்று தோன்றியது. படிப்பது, எழுதுவது, உணவு சாப்பிடுவது என்று அனைத்திற்கும் கால்களை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பள்ளி, கல்லுாரி தேர்வுகளை கால்களை பயன்படுத்தியே எழுதி வெற்றி பெற்றேன். எனது முயற்சிக்கு ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.
ஆலுவாஸ் கல்வி நிறுவனத்தில் குழந்தைகள் நல அதிகாரியாக பணி செய்கிறேன். ஒவ்வொரு தேர்தலின் போதும் காலை பயன்படுத்தி ஓட்டு போட்டு வருகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் இயலாமையை மறந்து, சாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால் சாதிக்கலாம். 2021ல் தேசிய மகளிர் தினத்தை ஒட்டி, எனக்கு 'தேசிய பெண்கள் சாதனையாளர் விருது' கிடைத்தது. இதனை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

