UPDATED : அக் 26, 2026 12:05 AM
ADDED : அக் 25, 2026 08:02 PM

- நமது நிருபர் -: த மிழகத்தின் கோவையை பூர்வீமாக கொண்டவர் சங்கீதா, 44. பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.பி.,யில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி எடுத்து வருகிறார். இவர், 'பானிக்ஸ்' முறை மூலம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார்.
அதாவது, ஒலி மூலம் ஆங்கில எழுத்துகளை படிக்க கற்றுத் தருகிறார். இம்முறையில் A என்பதை அ என்று ஒலி மூலம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. இம்முறையில் பயிலும் குழந்தைகள் விரைவாக ஆங்கிலத்தை எழுத, படிக்க கற்கின்றனர்.
இதற்காக, ஒரு நிறுவனத்தை நடத்துகிறார். இவரது நிறுவனத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று உள்ளனர்.
இப்பயிற்சியில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தாராளமாக சேரலாம். 4 முதல் 6 மாதங்கள் நடக்கும் பயிற்சி வகுப்பிற்கு, 12 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகுப்பு குறித்து, சங்கீதா நம் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
என் குடும்பத்துடன் அமெரிக்காவில் சில ஆண்டுகள் வசித்தேன். அப்போது, அங்கு குழந்தைகளுக்கு பானிக்ஸ் முறை மூலம், ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை பார்த்தேன். இம்முறையை நானும் கற்றுக்கொண்டேன். நான் கற்றதை எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன். அவர்களும் எளிதில் கற்றுக்கொண்டனர். இவ்வளவு எளிய முறை இருக்கும் போது, ஏன் மற்ற குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என நினைத்தேன்.
இதனால், மற்ற குழந்தைகளுக் கும் 'ஆன்லைன்' மூலம் கற்றுத்தந்தேன். கொரோனாவுக்கு பின்னர் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்தோம். பெங்களூரு எலக்ட்ரா சிட்டி, பொம்மசந்திராவில் சில ஆண்டுக ள் வசித்தோம்.
அப்போது, நிறைய குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க துவங்கினேன். ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கான குழந்தைகள் வகுப்பில் சேர்ந்தனர். இதனால், ஆசிரியர்களை நியமித்தேன். என் கம்பெனியை முறைப்படி பதிவு செய்தேன்.
பெண்கள் சுய முன்னேற்றத்திற்காக, 45க்கும் மேற்பட்ட பெண்களை பணியில் நியமித்தேன். வீட்டில் இல்லத்தரசிகளாக இருந்து கொண்டு, தொழில் முனைவோராக மாற நினைக்கும் பெண்களுக்கு, பானிக்ஸ் கற்று தருவேன். இவர்களில் சிறந்தவர்களுக்கு என் நிறுவனத்திலேயே பணியும் வழங்குவேன்.
இம்முறையில் பயிற்சி பெறும் குழந்தைகள், ஆங்கிலம் எழுதும் போது உண்டாகும் எழுத்துப்பிழை குறையும். ஆங்கிலத்தை வாசிக்கும் போது அர்த்தம் புரியும்.
அவர்களே சொந்தமான வாக்கியங்களை உருவாக்குவர். தங்கள் கற்பனை திறனை உபயோகித்து கதை எழுத முடியும்.
இந்த பயிற்சி குறித்து அறிய, 91506 80180 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
