sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடவள் அரங்கம்

/

 பசித்தவர்களுக்கு உணவளிக்கும் சுனந்தா

/

 பசித்தவர்களுக்கு உணவளிக்கும் சுனந்தா

 பசித்தவர்களுக்கு உணவளிக்கும் சுனந்தா

 பசித்தவர்களுக்கு உணவளிக்கும் சுனந்தா


ADDED : நவ 24, 2025 03:33 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது பொன்மொழி. தங்கள் பிறந்தநாள், திருமண நாள், கோவில் திருவிழாக்களில் வழங்குவர். அன்னதானம் செய்வதையே வேலையாக வைத்து உள்ளவரை பற்றி கேட்டது உண்டா; படித்தது உண்டா. இந்த கலியுகத்திலும் மாவீரன் கர்ணனை போல கொடையுள்ளம் கொண்ட ஒரு தாயின் கதையே இது.

ஹூப்பள்ளி ஆனந்த் நகரை சேர்ந்தவர் சுனந்தா ஹிரஹட்டி. பசித்தவர்களுக்கு உணவளிக்கும் உயர்வான பணியை செய்து வருகிறார். இதற்காக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை வாங்கி வந்து, பசியால் துடிக்கும் பலருக்கும் தானமாக செய்து வருகிறார். இவரது இந்த முயற்சிக்கு, அவரது கணவர் கரியப்பாவும் துணை நிற்கிறார்.

இவர் திருமண மண்டபங்களுடன் தொடர்பு வைத்து உள்ளார். அங்கு உணவு மீதமாகி விட்டால், உடனடியாக சுனந்தாவுக்கு கூறி விடுவர். அவரும், மீதமான உணவை எடுத்துவந்து பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு அளித்து வருகிறார். இவர், உணவு எடுத்து வருவதற்காக கார் ஒன்றை வைத்து உள்ளார்.

இவரது மஞ்சள் கார் வருவதை பார்த்தாலோ, காரின் சத்தம் கேட்டாலோ பசியால் இருப்பவர்கள் கடவுளே இறங்கி வருவது போல ஆனந்தம் அடைகின்றனர். அவர்களின் முகத்தில் வரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை என கூறலாம். இந்த சேவையை அவர் ஓரிரு ஆண்டுகளாக செய்யவில்லை; 21 ஆண்டுகளாக செய்து வருகிறார். இதனால், பலரும் பாராட்டி வருகின்றனர். இத்தனை புண்ணியம் செய்யும் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

இதனால், அவர்கள் மனம் தளரவில்லை. ஊரில் பசியால் இருக்கும் அனைவரும் தம் பிள்ளைகளே என நினைத்து, அன்னதானம் செய்து வருகின்றனர். தாங்கள் நடத்தும் சிறிய மளிகை கடையில் கிடைக்கும் லாபம் மூலம் தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

இப்படி பலருக்கு உதவி செய்யும் தம்பதிக்கு, உதவி செய்ய, இந்த பிரபஞ்சத்தில் சிலர் இருக்கின்றனர். இவர்களின் கொடை உள்ளத்தை பார்த்த மற்றொரு கொடை வள்ளலும், முன்னாள் ராணுவ வீரருமானவர் தனது காரை இலவசமாக கொடுத்து உள்ளார்.

பிள்ளைகளால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள், சொந்தத்தால் துாக்கி வீசப்பட்டவர்கள் என வீதியில் கிடப்பவர்களுக்கு உணவளிக்கும் இந்த நல்ல உள்ளங்களை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us