பெங்களூரில் 5 நாட்கள் நீச்சல் போட்டி பெங்.,கில் 5 நாட்கள் நீச்சல் போட்டி
பெங்களூரில் 5 நாட்கள் நீச்சல் போட்டி பெங்.,கில் 5 நாட்கள் நீச்சல் போட்டி
ADDED : ஜூலை 31, 2025 11:07 PM

பெங்களூரு: பெங்களூரில் வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நீச்சல் போட்டி நடக்க உள்ளது.
கர்நாடகா மாநில நீச்சல் அசோசியேஷன் சார்பில், ஆண்டுதோறும் பெங்களூரில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. வரும் 4, 5ம் தேதிகளில் பசவனகுடியில் உள்ள, 'அக்யுயடிக்' சென்டரில் 41வது சப் - ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்க உள்ளன.
வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை 51வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகள், வாட்டர் போலோ, டைவிங் என, இரு பிரிவுகளாக நடக்கிறது. டைவிங் போட்டிகள் ஹலசூரில் உள்ள கென்சிங்டன் நீச்சல் குளத்திலும், வாட்டர் போலோ போட்டிகள் பசவனகுடி அக்யுயடிக் சென்டரிலும் நடக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க கர்நாடகா, பல மாநிலங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் முன்பதிவு செய்து இருப்பதாக, கர்நாடக மாநில நீச்சல் அசோசியேஷன் தெரிவித்து உள்ளது. நீச்சல் போட்டி நடக்கும் நீச்சல் குளங்கள் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
''வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்,'' என்று, நீச்சல் அசோசியேஷன் கவுரவ செயலர் சதீஷ்குமார் கூறி உள்ளார்.