தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் சாதிக்கும் பெலகாவியின் லட்சுமி ராயப்பா

 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் சாதிக்கும் பெலகாவியின் லட்சுமி ராயப்பா

 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் சாதிக்கும் பெலகாவியின் லட்சுமி ராயப்பா


ADDED : ஜூன் 25, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

மாற்றுத்திறனாளியாக பிறந்தாலும், வீட்டிலேயே முடங்காமல், தனக்கு பிடித்த, சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் கவனம் செலுத்தி, பாரா காமன்வெல்த் போட்டிக்கு, இந்திய அணி சார்பில் பெலகாவியை சேர்ந்த லட்சுமி ராயப்பா தேர்வாகி, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

பெலகாவி மாவட்டம், யரகட்டி தாலுகாவின் அலடகட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயப்பா - ருத்ரவ்வா தம்பதி. இவர்களின் மகள் லட்சுமி ராயப்பா, 30. இவர், பிறந்த போது, போலியோவால் பாதிக்கப்பட்டார். மனம் தளராத அவரின் பெற்றோர், உயர்கல்வி வரை மகளை படிக்க வைத்தனர். அரசியல் அறிவியலில் எம்.ஏ., - பி.எட்., படித்துள்ள லட்சுமி, தனது கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளியில் கவுரவ ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டில் சாதித்தது குறித்து லட்சுமி ராயப்பா அளித்த பேட்டி:

நோ விடுமுறை அரசு பள்ளியில் கவுரவ ஆசிரியையாக பணியாற்றி வந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றியது. அப்போது சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்பயிற்சிக்காக பள்ளி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்ட போது, கிடைக்காததால், முழு நேரம் விளையாட்டில் ஈடுபட்டேன். இதற்காக, மத்திய பிரதேசத்தின் குவாலியர், தமிழகத்தின் கோயம்புத்துாரில் உள்ள முகாம்களில் பயிற்சி பெற்றேன்.

கடந்த, 2019ல் பயிற்சி பெற்று மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலும் சிறப்பாக விளையாடினேன். இதுவரை, 25க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன். நான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீரர், மிகவும் மதிப்புமிக்க வீரர் என பல விருதுகளை வென்றுள்ளேன்.

இவை அனைத்தையும் அங்கீகரித்த, இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினர், ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆக., 2 வரை நடக்க உள்ள பாரா காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு இந்திய அணிக்கு என்னை தேர்வு செய்துள்ளனர்.

அரசு வேலை கிடைக்குமா? காமன்வெல்த் போட்டியில் இந்தியாவை சாம்பியன் ஆக்குவதே என் கனவு. அதன் பின், உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடுவது என் மிகப்பெரிய கனவாகும். என்னை மாநில, மத்திய அரசுகள் என்னை அங்கீகரிக்கவில்லை; எனக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை. எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள எனக்கு, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், எனக்கு அரசு வேலை கிடைத்தால், என் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும்.

எங்கள் கிராமத்தில் மைதானம் இல்லை. மண் சாலையில் தான், பல நாட்கள் பயிற்சி பெற்றேன். பெலகாவியில் உள்ள ஹனுமன் நகரில் கூடைப்பந்து மைதானம் உள்ளது. இங்கு தினமும், 6 முதல் 8 மணி நேரம் பயிற்சி செய்வது வழக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us