sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

தேவ்தத் படிக்கல் -- ரூ.13.20 லட்சம் மணிஷ் பாண்டே - ரூ.12.20 லட்சம்

/

தேவ்தத் படிக்கல் -- ரூ.13.20 லட்சம் மணிஷ் பாண்டே - ரூ.12.20 லட்சம்

தேவ்தத் படிக்கல் -- ரூ.13.20 லட்சம் மணிஷ் பாண்டே - ரூ.12.20 லட்சம்

தேவ்தத் படிக்கல் -- ரூ.13.20 லட்சம் மணிஷ் பாண்டே - ரூ.12.20 லட்சம்


ADDED : ஜூலை 17, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் மஹாராஜா டிராபி - 2025 கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த மணிஷ் பாண்டேவை, 12.20 லட்சம் ரூபாய்க்கு, மைசூரு வாரியர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், 2022 முதல் ஆண்டுதோறும், 'மஹாராஜா டிராபி டி 20' கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. 2022ல் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணியும், 2023ல் ஹூப்பள்ளி டைகர்ஸ் அணியும்; 2024ல் மைசூரு வாரியர்ஸ் அணியும் வெற்றி பெற்றது.

இந்தாண்டும் மஹாராஜா டிராபி டி20 போட்டி நான்காவது சீசன், ஆக., 11 முதல் செப்., 1ம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டியில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ், மங்களூரு டிராகன்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த அணிக்கு வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. வீரர்கள் 'ஏ', 'பி', 'சி', 'டி' என நான்கு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் 18 பேர் உள்ளனர்.

பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி


'ஏ' பிரிவில் எந்த வீரர்களையும் தேர்வு செய்யவில்லை. கடந்தாண்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட எல்.ஆர்.சேத்தன், இம்முறை 5.10 லட்சம் ரூபாய்க்கும்; வேகப்பந்து வீச்சாளர்களான வித்யாதர் பாட்டீல், 8.30 லட்சம் ரூபாய்க்கும்; ரோஹன் பாட்டீல் 2.70 லட்சம் ரூபாய்க்கும்; 16 வயது மாதவ் பிரகாஷ் பஜாஜ், 3.15 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

மைசூரு வாரியர்ஸ்


மைசூரு வாரியர்ஸ் நிர்வாகத்தினர், ஆல் ரவுண்டர்களில் விருப்பம் காட்டினர். மணிஷ் பாண்டே, ரூ.12.20 லட்சம் ரூபாய்க்கும்,

கே.கவுதம் 4.40 லட்சம் ரூபாய்க்கும்; யசோவர்தன் பரந்தாவை 2 லட்சம் ரூபாய்க்கும்; வேகப்பந்து வீச்சாளர் குமார் 1.50 லட்சம் ரூபாய்க்கும்; இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷிகார் ஷெட்டி 4.70 லட்சம் ரூபாய்க்கும்; வெங்கடேஷ் 2 லட்சம் ரூபாய்க்கும்; கவுதம் மிஸ்ரா 2.25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஹூப்பள்ளி டைகர்ஸ்


தேவ்தத் படிக்கல்லை, 13.20 லட்சம் ரூபாய்க்கும்; முகமது டாஹாவை 4.60 லட்சம் ரூபாய்க்கும்; வேகப்பந்து வீச்சாளர் சமரத் நாகராஜை, 3.20 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.

குல்பர்கா மிஸ்டிக்ஸ்


விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சித்தார்த்தை 6.10 லட்சம் ரூபாய்க்கும்; வலது கை வேகப்பந்து வீச்சாளர் மோனிஷ் ரெட்டியை 4.65 லட்சம் ரூபாய்க்கும்; லாவிஷ் கவுஷல் 7.75 லட்சம் ரூபாய்க்கும்; நிகின் ஜோஷ் ஒரு லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.

ஷிவமொக்கா லயன்ஸ்


வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் காவேரப்பா 10.80 லட்சம் ரூபாய்க்கும், ஆல்ரவுண்டர் அனிஷ்வர் கவுதம் 8.20 லட்சம் ரூபாய்க்கும், அனுபவம் வாய்ந்த அனிருத் ஜோஷியை 3.60 லட்சம் ரூபாய்க்கும்; லெக் ஸ்பின்னர் தீபக் தேவடிகாவை 1.20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.

மங்களூரு டிராகன்ஸ்


ஸ்ரேயாஸ் கோபால் 8.60 லட்சம் ரூபாய்க்கும்; கிராந்தி குமார் 5.60 லட்சம் ரூபாய்க்கும், வேகப்பந்து வீச்சாளர் ரோஹித் 3.40 லட்சம் ரூபாய்க்கும், அபிஷேக் பிரபாகர் 3.07 லட்சம் ரூபாய்க்கும், சரத் 2.20 லட்சம் ரூபாய்க்கும், சிவராஜ் 6.55 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us