ADDED : ஜூலை 17, 2025 11:09 PM
தேசிய அளவிலான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் 20ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் நடக்கிறது. இதற்காக, கர்நாடகா ஜூனியர் கால்பந்து அணி மும்முரமாக தயாராகி வருகிறது. அணியின் கேப்டனாக நித்தின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான, கர்நாடக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 21ம் தேதி காலை 9:30 மணிக்கு சாந்திநகர் ஹாக்கி மைதானத்தில், வீரர்கள் தேர்வு நடக்கிறது. இதில் 2006, ஜன 1 ம் தேதிக்கு பின், பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கர்நாடகாவின் ரைசிங் செஸ் ஸ்டார் கிராண்ட் மாஸ்டர் பிரணவ் ஆனந்த், 18. ஸ்பெயினில் நடந்த பெனஸ்க் ஓபன் செஸ் போட்டியில் 3வது இடத்தை பிடித்தார்.
மைசூரு மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் நடத்தும் 'ரோடு சைக்கிளிங் மகளிர் லீக்' போட்டி வரும் 20ம் தேதி காலை 6:00 மணிக்கு, மைசூரு லலிதபுராவில் துவங்குகிறது.
கர்நாடக கிரிக்கெட் வாரியம் நடத்தும் மகளிர் டெஸ்ட் லீக் போட்டியில், 33 அணிகள் பங்கேற்று உள்ளன. நேற்றைய நிலவரப்படி 12 புள்ளிகள் பெற்று, இரண்டு அணிகள் முதலிடத்தில் உள்ளன.