தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ கேம் ஆன் 1. 2. . 3...

 கேம் ஆன் 1. 2. . 3...

 கேம் ஆன் 1. 2. . 3...


ADDED : ஜூலை 30, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் - முதலிடத்தில் ஆர்.சி.பி., ஐ.பி.எல்., தொடரில் ஆர்.சி.பி., எனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதனால், அந்த அணியின் பிராண்ட் மதிப்பு, 2,986 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இது, மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு அணியின் பிராண்ட் மதிப்பு முதல் முறையாக அமெரிக்க டாலர் மதிப்பில், 300 மில்லியன் டாலரை தாண்டி உள்ளது. இதன் மூலம், பிராண்ட் மதிப்பில் பெங்களூரு அணி முதலிடத்தை பிடித்து உள்ளது. இதற்கு அடுத்த படியாக மும்பை, சென்னை உள்ளிட்ட அணிகள் உள்ளன.

ஜிம்னாஸ்டிக் கர்நாடக ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் நடத்தும், தேசிய அளவிலான அக்ரோபாட்டிக் வகையிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி, நாளை முதல், 3ம் தேதி வரை மைசூரு சாமுண்டி விஹார் உள்விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில், பல மாநிலங்களை சேர்ந்த, 350க்கும் மேற்ப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

டேபிள் டென்னிஸ் கர்நாடக மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, ஆகஸ்ட் 5 முதல், 9ம் தேதி வரை நடக்கிறது. 11, 13, 15, 17 ,19 வயதுக்கு உட்பட்டோருக்கென தனித்தனியாக போட்டி நடக்கிறது. இதில், இரு பாலரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க https://karnatakatabletennis.in என்ற இணையதளத்தில், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் முன்பதிவு செய்வது கட்டாயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us