தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்ரீவள்ளி ராஷ்மிகா முன்னேற்றம்

 மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்ரீவள்ளி ராஷ்மிகா முன்னேற்றம்

 மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்ரீவள்ளி ராஷ்மிகா முன்னேற்றம்


ADDED : பிப் 20, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பெங்களூரில் நடக்கும் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஐரோப்பா வீராங்கனை பிரான்செஸ்கா கர்மியை வீழ்த்தி, இந்தியா வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பெங்களூரில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், உலக டென்னிஸ் தரவரிசையில் 543வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தரவரிசையில் 336வது இடத்தில் இருக்கும் ஐரோப்பா நாட்டின் மால்டாவை சேர்ந்த பிரான்செஸ்கா கர்மி மோதினர்.

முதல் செட்டில், 4 - 2 என்ற நேர்செட் கணக்கில் மால்டா வீராங்கனை முன்னிலை வகித்தார். தனது சரிவை உணர்ந்த ஸ்ரீவள்ளி ராஷ்மிகா தனது வலுவான, 'சர்வ் ஷார்ட்' மூலம் எதிராளியை திணறடித்தார். முதல் செட்டில், 4 - 4க்கு என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

'டை பிரேக்கர்' முறையில் நடந்த ஆட்டத்தில் 7 - 6; 6 -4 என்ற நேர்செட் கணக்கில் பிரான்செஸ்கா கர்மியை வீழ்த்திய ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அடுத்த சுற்றில் மூன்றாம் நிலை வீராங்கனை ஹன்னே வாண்டேவின்கெல்லை எதிர்கொள்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us