தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ ஆசிய போட்டிக்கு தேர்வானார் சுப்ரியா

 ஆசிய போட்டிக்கு தேர்வானார் சுப்ரியா

 ஆசிய போட்டிக்கு தேர்வானார் சுப்ரியா


ADDED : செப் 25, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு, சிக்கமகளூரை சேர்ந்த இளம் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உயரம் தாண்டுதல் பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் - வாணி தம்பதியின் மகள் சுப்ரியா சிந்திகெரே, 25. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தொடக்க கல்வி படித்தார்.

சிந்திகெரேவில் உள்ள ஸ்ரீகுரு பசவேஸ்வரா பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார்.

அதன் பின், தாலுகா, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மாநில அளவில் நடந்த இரண்டாம் இடத்தை பிடித்தார். விளையாட்டுக்கான வேலைவாய்ப்பு பிரிவில், ஆள்வாஸ் கல்லுாரியில் இலவசமாக அட்மிஷன் பெற்றார்.

விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி, தங்கப்பதக்கங்கள் குவித்து, சாதனை செய்தார்.

இதற்கிடையே, சுப்ரியாவுக்கு, கடுமையான உடல்நல குறைபாடு ஏற்பட்டது. ஆனால் மனம் தளராமல், மீண்டும் பயிற்சியை துவக்கினார்.

பெங்களூரில் பயிற்சி பெற, பொருளாதார பிரச்னை ஏற்பட்ட போது, சிக்கமகளூரின், 'லைன் பீட்ஸ்' உரிமையாளர் கிஷோர்குமார் முன் வந்து உதவினார், பெற்றோரின் ஊக்கம் மற்றும் தன் கடின உழைப்பால், தற்போது 20வது ஆசிய விளையாட்டு போட்டிக்கு, இந்தியா சார்பில் சுப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தங்கம் வெல்லும் குறிக்கோளுடன் பயிற்சி பெறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us