தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ எகிப்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணியில் குடகு மாணவி தியா பீமய்யா

 எகிப்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணியில் குடகு மாணவி தியா பீமய்யா

 எகிப்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணியில் குடகு மாணவி தியா பீமய்யா


ADDED : செப் 25, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -: எகிப்து நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் விளையாட, குடகு மாவட்டத்தை சேர்ந்த, கல்லுாரி மாணவி தியா பீமய்யா தேர்வாகி உள்ளார்.

குடகு மாவட்டத்தின் மடிகேரியை சேர்ந்தவர் போப்பண்டா பீமய்யா - மனைவி குஸ்மா.

இந்த தம்பதியின் மகள் தியா, 17. மைசூரில் தனியார் கல்லுாரியில் பி.யு., 2ம் ஆண்டு படிக்கிறார்.

பேட்மின்டன் வீராங்கனையான இவர், மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள தேசிய பேட்மின்டன் அகாடமியில் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

கடந்த 18ம் தேதி முதல், 21ம் தேதி வரை, அகாடமியில் நடந்த பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, எகிப்து நாட்டில் அடுத்த மாதம் நடக்கும், உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் விளையாட, தியா பீமய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சக வீராங்கனை பருணி பருஸ்வாலுடன் இணைந்து விளையாட உள்ளார்.

தியா, இந்திய அணிக்கு விளையாட தேர்வாகி இருப்பதன் மூலம், தங்கள் கனவு பலித்து விட்டதாக அவரது பெற்றோர் பெருமிதத்துடன் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us