தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ தாலுகா அளவில் தசரா போட்டி வீரர் - வீராங்கனையர் அசத்தல்

 தாலுகா அளவில் தசரா போட்டி வீரர் - வீராங்கனையர் அசத்தல்

 தாலுகா அளவில் தசரா போட்டி வீரர் - வீராங்கனையர் அசத்தல்


ADDED : செப் 25, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

மைசூரு நகரில் உள்ள சாமுண்டி விஹார் மைதானத்தில் தாலுகா அளவிலான தசரா விளையாட்டு போட்டிகள் நடந்தன.

ஆண்கள் பிரிவு ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குருபிரசாத், பவன், கிரிஷ் குமார்; 200 மீட்டரில் குருபிரசாத், கிரிஷ் குமார், வருண்; 400 மீட்டரில் வருண், திரிஷுயு, ராகேஷ்; 800 மீட்டரில் ஹர்ஷித், சிராயு, ரிஷு; 1,500 மீட்டரில் ஹர்ஷித், சித்தலிங்கேஷ், பிரணவ்.

மேலும், 5,000 மீட்டரில் புருஷோத்தம், சிவானந்த், சுமந்த்; 10,000 மீட்டரில் புருஷோத்தம், தீக் ஷித் ஆகியோர் இந்த பிரிவுகளில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில், சுமந்த்ரங்கா, யாது, நந்தன் ஆகியோர் முதல் மூன்று இடங்கள்; உயரம் தாண்டுதலில், ரக்ஷித், ராகுல், பாட்டீல்.

மேலும், ஷாட்புட் போட்டியில் பிரஜ்வல், முகமது சக்லைன், கவுதம்; டிரிபிள் ஜம்ப் போட்டியில் நாகேந்திர பிரசாத், சிராந்த், லிகித்; ஈட்டி எறிதல் போட்டியில் கவுதம், நந்தன், அக் ஷய்; வட்டு எறிதல் போட்டியில் முகமது சக்லைன் முகமது, லிகித் ஆகியோரும் முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.

இதில், 4X100 மீட்டர் ரிலே போட்டியில், குருபிரசாத், ஹர்ஷிதா கவுடா, அக் ஷய், சுஜன் அணி முதலிடத்தை பிடித்தனர். 4X400 மீட்டர் ரிலே போட்டியில் அர்ஷித், ராகுல், வருண், தீபக் அணி முதல் இடத்தை பிடித்தன.

பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயம் - 100 மீட்டரில், மம்தா, சாதனா, அமல்யா; 200 மீட்டரில் மம்தா, தீட்சித், திஷா திவாகர்; 400 மீட்டரில், வர்ஷா, தீட்சித், நிஷ்தா; 800 மீட்டரில் காவ்யா, கீர்த்தன், பிரியங்கா குமாரி; 1,500 மீட்டரில் ஷிவானி, ரோகினி, பிரியங்கா குமாரி; 3,000 மீட்டரில் அஸ்வினி, ஜெயஸ்ரீ, காயத்ரி ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில் வின்யா மேரி, தீபிகா, திஷா திவாகர்; உயரம் தாண்டுதலில் அமுல்யா, நிகிதா, அஙகிதா; ஷாட்புட் பிரிவில் அகன்ஷா, ரூபா, சைத்ரா; டிரிபிள் ஜம்பில் அமுல்யா, சிரி; ஈட்டி எறிதலில் ஸ்ரேயா, ரூபா; வட்டு எறிதலில் சுஷ்மா, சுமா; 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயதில் நிகிதா ஆனந்த் லமானி, சிரி, அம்ருதா கிருஷ்ணா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

மேலும், 4X100 மீட்டர் ரிலே போட்டியில், தீபிகா, சாதனா, நிஷ்தா கவுடா, தீட்சித் அணி முதலிடம்; 4X400 ரிலே போட்டியில் ஷிவானி, காயத்ரி, ரோகினி, காவ்யா அணி முதலிடம் பிடித்தன.

குழு போட்டி ஆண்கள் பிரிவில், கபடி போட்டியில் சித்தலிங்கபுரா முதலிடம்; நாகனஹள்ளி இரண்டாவது இடம்; கோ - கோ போட்டியில் பயணியர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி; சாமுண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஆகியன முதல் இரண்டு இடத்தை பிடித்தன.

மகளிர் பிரிவில், கபடி போட்டியில் சரஸ்வதிபுரம் ஜே.எஸ்.எஸ்., மகளிர் கல்லுாரி முதலிடம்; ரவி கபடி அகாடமி இரண்டாவது இடம் பிடித்தன.

கோ - கோ போட்டியில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடம்; சரஸ்வதிபுரம் ஜே.எஸ்.எஸ்., மகளிர் கல்லுாரி இரண்டாவது இடம்; ஜி.எச்.எஸ்., ஹாரோஹ்ளி முதலிட ம், மைசூரு ஜே.எஸ்.எஸ்., அணி இரண்டாவது இடமும் பிடித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us