ADDED : அக் 23, 2025 11:07 PM

பெங்களூரு பத்மநாபநகரில் தொட்டகல்லப்பா நீர்வாழ் மையம் உள்ளது. இளம் நீச்சல் வீரர், வீராங்கனையர், தங்களது திறமையை வெளி கொண்டு வர, நீர்வாழ் மையத்தில் உள்ள நீச்சல் குளத்தில், ஆண்டிற்கு ஒரு முறை நீச்சல் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான போட்டிகள் அடுத்த மாதம் 8, 9ம் தேதிகளில் நடக்க உள்ளன. இது நான்காவது ஆண்டாக நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கி உள்ளன.
நீச்சல் போட்டிகளில் கர்நாடகாவின் இளம் வீரர், வீராங்கனையர் மட்டுமின்றி, பிற மாநிலத்தை சேர்ந்தோரும் பங்கேற்கின்றனர். நாக் அவுட் சுற்றில் இடம்பிடித்து உள்ள, 'ஸ்கின்ஸ்' போட்டிக்கு, பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. ஸ்விம்சூட் இன்றி வீரர், வீராங்கனையர் நீச்சல் அடிக்கும் வேகத்தையும், அவர்களின் மன வலிமையும் பிரதிபலிக்கும் போட்டியாக, 'ஸ்கின்ஸ்' போட்டிகள் உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு, 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பல பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு பிரித்து வழங்கப்படும். இம்முறை,'மிகவும் மதிப்புமிக்க நீச்சல் வீரர்' விருதும் சேர்க்கப்பட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்க் விரும்புவோர் https:// nac.org.in/ nettakallappa - swimming - competition என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- நமது நிருபர் -

