ADDED : ஜூன் 27, 2025 06:53 AM

பெங்களூரு கப்பன் பார்க்கில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் தனிஷ்கா, அபினவ் வெற்றி பெற்றனர்.
பெங்களூரு கப்பன் பார்க் வளாகத்தில், அரசு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கை மையம் உள்ளது. இந்த மையத்தில் மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் ஆடவர் பிரிவில், விளையாட்டு வீரர்கள் அபினவ் மூர்த்தி - அதர்வா விளையாடினர்.
இதில் 13- 11; 11 - 6; 10 - 12; 8 - 11; 12 - 10க்கு என்ற கணக்கில் அதர்வாவை வீழ்த்தி அபினவ் மூர்த்தி பைனலுக்கு வந்தார். இன்னொரு அரை இறுதியில் விபாஸ் - கவுரவ் கவுடா இடையில் போட்டி நடந்தது. இதில் 11 - 3; 11 - 6; 11 - 9 என்ற கணக்கில் கவுரவ் கவுடாவை விபாஸ் வீழ்த்தினார்.
நேற்று மதியம் நடந்த இறுதி போட்டியில் அபினவ் - விபாஸ் மோதினர். இதில் 11 - 8; 9 - 11; 13 - 11; 16 - 14; 5 - 11; 11 - 4; என்ற நேர்செட்டில் விபாசை வீழ்த்தி அபினவ் வெற்றி வாகை சூடினார்.
பெண்களுக்கான இறுதி போட்டியில் தனிஷ்கா - மிஹிகா சுமேதா மோதினர். இதில் 11 - 2; 11 - 4; 11 - 8; 11 - 7; என்ற நேர் செட்டில் மிஹிகா சுமேதாவை வீழ்த்தி தனிஷ்கா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இருவருக்கும் போட்டி நடத்தியவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்
- நமது நிருபர் -.