ADDED : ஜூலை 17, 2025 11:07 PM

'யோனெக்ஸ் - சன்ரைஸ்' நிறுவனங்கள், கர்நாடக மாநில பேட்மின்டன் சங்கம் இணைந்து 13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில தரவரிசை பேட்மின்டன் டோர்னமென்ட் - 2025 ஐ சமீபத்தில் பெங்களூரு வசந்த நகரில் உள்ள பேட்மின்டன் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.
கடந்த 13ம் தேதி நடந்த, 13 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதி போட்டியில் ஒற்றையர் பிரிவில் ராய்ச்சூரின் இஷான் பதக், பெங்களூரின் தஷ் ரத்ரோட் மோதினர். இந்த போட்டியில் 21 - 15; 22 - 24; 22 - 20 என்ற நேர் செட் கணக்கில் இஷான் பதக் வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெங்களூரின் ஜோஹனா - புன்யா மோதினர். இந்த போட்டியில் 13 - 21; 21 - 18; 21 - 12 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹனா வென்றார்.
இரட்டையர் பிரிவில் இஷான் பதக் - ரோஹன் ஜோடியும், தஷ் ரத்தோட் - சன்ஷ்ரே சுனில் ஜோடியும் மோதியது. இதில் 23 - 21; 21 - 13 என்ற நேர் செட் கணக்கில், இஷான் பதக் - ரோஹன் ஜோடி வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் பெங்களூரின் ஜோஹனா - புன்யா ஜோடி 17 - 21; 21 - 14; 21 - 10 என்ற நேர் செட் கணக்கில் பெங்களூரின் தக் ஷிதா முண்ட்லா -ஜான்யஸ்ரீ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தவிர, 11 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பெங்களூரின் அகஸ்தியா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தஷ் ரகுநாத்தை 21 - 17; 21 - 17 என்ற கணக்கிலும்; பெண்கள் பிரிவில் ஸ்ரேயா ராவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட யசோதினியை 21 - 13; 21 - 18 என்ற கணக்கிலும் வென்றனர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் நீவ் சுஷ்ருத் - பிரணவ் ஜோடி, சமமு - செல்ல பிரனேஷ் ஜோடியை 21 - 9; 21 - 6 என்ற கணக்கில் வீழ்த்தியது. பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நிஹாரிகா ராஜ் - ஸ்ரேயா ஜோடி, கிருஷா - குஷி ஜோடியை 21 - 13; 22 - 20 என்ற கணக்கில் வீழ்த்தியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது
- நமது நிருபர்-.