ஆசிய பேட்மின்டன் போட்டி வெள்ளி வென்ற உடுப்பி வீரர்
ஆசிய பேட்மின்டன் போட்டி வெள்ளி வென்ற உடுப்பி வீரர்
ADDED : ஏப் 17, 2026 04:59 AM

- நமது நிருபர் -: சீனாவில் நடந்த ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் உடுப்பி வீரர் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
சீனாவில் நடந்த ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், சீனாவின் ஷி யூ கி உடன், கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்த ஆயுஷ் ஷெட்டி, 20, மோதினார். இப்போட்டி நிறைவில் சீன வீரரிடம், 21 - 8 , 21 - 10 என்ற கணக்கில் ஆயுஷ் ஷெட்டி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கடந்த, 1965ல் தினேஷ் கன்னா என்பவர் தங்கம் வென்றிருந்தார். 60 ஆண்டுகளுக்கு பின், ஆசிய பேட்மின்டன் இறுதி போட்டியில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய பேட்மின்டன் வீரர்களில், இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டி கூறியதாவது:
பேட்மின்டன் போட்டியில், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று என்றுமே நினைத்ததில்லை. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, உலகின் நம்பர் ஒன் வீரராக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அதுவே என்னை இந்த இடத்துக்கு அழைத்து வந்து உள்ளது. இந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
