sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

பலாக்காய் பிரியாணி சாப்பிடலாமா?

/

பலாக்காய் பிரியாணி சாப்பிடலாமா?

பலாக்காய் பிரியாணி சாப்பிடலாமா?

பலாக்காய் பிரியாணி சாப்பிடலாமா?


ADDED : மார் 01, 2025 05:40 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வார விடுமுறையில் காரசாரமான உணவை சுவைக்க, பலாக்காய் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம். இதற்கு பேபி பலாக்காய் போதுமானது.

சமைப்பதற்கு முன், பேபி பலாக்காயின் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பலாக்காயை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சுள் துாள், உப்பு சேர்த்து, 60 சதவீதம் அளவுக்கு வேக வைக்கவும்.

ஏனெனில், மீதி பலாக்காய் பிரியாணி மசாலா சமைக்கும் போது வெந்து விடும். எனவே பலாக்காயை முழுதாக வேகவைக்க தேவையில்லை. அதே நேரம் 350 கிராம் பாஸ்மதி அரிசியை, பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை


 பெரிய பாத்திரத்தில் 150 மில்லி லிட்டர் நெய் ஊற்ற வேண்டும். அது சூடான பின், பிரியாணிக்கு சுவை சேர்க்க இரண்டு பிரிஞ்சி இலை, இரண்டு பட்டை, நான்கு ஏலக்காய், நான்கு கிராம்பு சேர்த்து வறுக்கவும்

 வறுக்கும் போது நறுமணம் கிடைத்த பின், மூன்று மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி போடவும்

 வெங்காயம் பொன்னிறத்துக்கு மாறியவுடன், ஐந்து ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

 இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை போன பின், ஐந்து பச்சை மிளகாயை கீறி போடவும். அதை தொடர்ந்து இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை, சிறிதாக வெட்டி பாத்திரத்தில் போட்டு வதக்கவும்

 இவற்றுடன் முக்கால் ஸ்பூன் மஞ்சுள் துாள், ஒரு டீஸ்பூன் மிளகாய் துாள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா துாள், பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். இதுவரை நாம் சேர்த்த பொருட்கள் நன்கு வதங்கிய பின், 200 மில்லி லிட்டர் தயிர் சேர்க்கவும். பிரியாணிக்கான மசால் ரெடியாகிவிட்டது

 அடுத்து, ஏற்கனவே 60 சதவீதம் வேகவைத்த பேபி பலாக்காய் துண்டுகளை பெரிய பாத்திரத்தில் போடுங்கள். இந்த செய்முறையில் அடி பிடிக்காமல் இருக்க, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள்

 ஒரு கை அளவுக்கு புதினா, கொத்தமல்லியை தண்ணீரில் நன்கு கழுவி, நறுக்கிய பின், பிரியாணி மசாலாவில் சேர்க்கவும்

 எட்டு முதல் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் பலாக்காயை வேக வேண்டும்

 பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அது சற்று சூடான பின், 350 கிராம் பாஸ்மதி அரிசியை போடுங்கள்

 இதற்கு அரை ஸ்பூன் உப்புடன், ஐந்து கிராம் குங்குமப் பூவையும் சேர்த்து கொள்ளுங்கள்

 75 சதவீதம் பாஸ்மதி அரிசி வேக வைத்தால் போதும். அடுப்பை அணைத்து விடுங்கள்

 தண்ணீரை நன்கு வடிகட்டிய பின், அரிசியை எடுத்து கொள்ளுங்கள். பலாப்பழம் வெந்துவிட்டதா என்று பார்த்த பின், அந்த பாத்திரத்தில் அரிசியை போட்டுவிடுங்கள். இதனுடன் தாழம்பூ தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இதன் மூலம் பிரியாணியின் சுவை கூடும்

 தற்போது அடுப்பில் தட்டையான கடாய் அல்லது தோசை கல் வைத்து, அதன் மேல், பிரியாணி மசாலா இருக்கும் பாத்திரத்தை வைக்கவும். அதன் மீது மூடி போட்டு, பாஸ்மதி அரிசி, பலாக்காய் வேகவைத்த பாத்திரத்தை வைக்கவும். மீதமான தீயில் 15 நிமிடங்கள் இருக்கட்டும்

 பின், அடுப்பை அணைத்து விட்டு, பாஸ்மதி, பலாப்பழம் இருந்த பாத்திரத்தை கீழே வைத்து, மசாலாவை அதன் மீது வைத்து கிளறினால், சுவையான பலாக்காய் பிரியாணி ரெடியாகிவிடும்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us