ADDED : மார் 14, 2025 11:48 PM

ராகி கில்ஸ், கர்நாடகாவின் சம்பிரதாய இனிப்பு பண்டமாகும். இது ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும். அதை எப்படி செய்வது என பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
வெல்லம் - ஒரு கப் (ருசிக்கு ஏற்றபடி)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கட்டியில்லாமல் பாகு பதத்திற்கு வரும் வரை கலக்கி இறக்கவும்.
பின் வாணலியில் ராகி மாவை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வறுக்கவும். இந்த மாவில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி போட்டு, நன்றாக கலக்கவும்.
இதில் கரைத்து வைத்துள்ள வெல்ல பாகை, சிறிது, சிறிதாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். கலவை கெட்டியாக துவங்கியதும், நெய் ஊற்றி கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடவும். சதுரமாக வெட்டவும். வெல்லம் போதவில்லை என்றால், தேவையான அளவில் சேர்க்கலாம்.
ராகி கில்ஸ் கடையில் வாங்கியதை போன்று சுவையாக இருக்கும். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.
- நமது நிருபர் -