ADDED : பிப் 14, 2025 11:10 PM

பொதுவாக பன்னீரில் பல விதமான உணவுகள் தயாரிப்பது வழக்கம். இதில் பன்னீர் புர்ஜியும் ஒன்றாகும். முட்டை சாப்பிட விரும்பாதவர்கள், பன்னீர் புர்ஜி சாப்பிடலாம்.
செய்முறை
அடுப்பில் பெரிய வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் சீரகம் போடவும். அது வெடித்ததும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதன்பின் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, தேவையான உப்பு போட்டு நன்றாக கிளறவும். மிதமான தீயில் வைத்து, மசாலாவை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பன்னீரை போடவும். பன்னீர் முழுமையாக மென்மையாகும் வரை, விடாமல் கிளற வேண்டும். அதன்பின் மூன்று நிமிடம் அடுப்பில் வைத்திருக்கவும்.
அதில் கஸ்துாரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை போட்டால், படா பட் பன்னீர் புர்ஜி தயார். உணவுக்கு தொட்டு கொள்ள, சப்பாத்தி, பிரட் டோஸ்டுக்கு நல்ல காம்பினேஷன்.
- நமது நிருபர் -